உலக சிறுவர் தினத்தில் IDH வைத்தியசாலையின் சிறுவர் நோய் நிபுணத்துவ நோயாளர் விடுதியின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவை கட்டியெழுப்ப தேசிய இளைஞர் படையணியின் நிதி நன்கொடை
அக்டோபர் மாதம் 1 ஆம் திகதி இடம்பெற்ற உலக சிறுவர் தினத்தை அனுஷ்டிப்பதற்கும், தற்சமயம் காணப்படுகின்ற கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெறும் சிறுவர்களின் மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் தேசிய இளைஞர் படையணியின் தவிசாளர் கர்ணல் தர்ஷன ரத்னாயக்க அவர்கள் மூலம் ரூபாய் ஒரு மில்லியனுக்கு அதிக நிதி அன்பளிப்பு சிறுவர் நோய் நிபுணத்துவ பிரிவின் கோவிட் நிதியத்திற்கு நன் கொடையாக வழங்குவது ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி நடைபெற்றது.
தேசிய இளைஞர் படையணியின் பணிக்குழாம் அங்கத்தவர்கள் அனைவரும் தமது ஒருநாள் சம்பளத்தினை இதற்காக பங்களிப்பு செய்ததுடன், “அன்பளிப்பு செய்யப்பட்ட நிதியின் மூலம் IDH வைத்தியசாலையின் சிறுவர் நோய் நிபுணத்துவ நோயாளர் விடுதியின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவை கட்டியெழுப்புதல் மற்றும் அதன் வசதிகளை மேம்படுத்தி சிறுவர்களின் உயிரை காப்பாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என அன்பளிப்பு செய்யப்பட்ட நிதியை பொறுப்பேற்கும் போது சிறுவர் நோய் விசேடத்துவ நிபுணர் மருத்துவர்களின் சங்கத்தின் தலைவர் மற்றும் covid-19 தொற்றுக்குள்ளான சிறுவர்கள் தொடர்பான தேசிய செயற்திட்டத்தின் முன்னோடி விசேடத்துவ மருத்துவர் பேராசிரியர் செயாமன் ரஜின்திரன் அவர்கள் குறிப்பிட்டார்கள்.