Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் புளத்சிங்கள பயிற்சி நிலையத்திற்கு விஜயம்…

தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் கேர்ணல் சுஜீவ ரத்னநாயக்க USP psc IG அவர்கள்  புளத்சிங்கள பயிற்சி நிலையத்திற்கு நேற்று (11) விஜயம் செய்து அங்கு செயல்படுத்தப்பட்டுள்ள பயிற்சி நிகழ்த்தி திட்டங்கள் பற்றி கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அத்துடன், அங்கு இளைஞர் பயிலிளவல்கள் மற்றும் ஆலோசர்களுடன் கருத்து பரிமாற்றம் செய்து கொண்ட பணிப்பாளர் அவர்கள் பயிற்சி நிலையத்தில் எதிர்கால அபிவிருத்தி அமைப்புகள்  தொடர்பிலும் கவனம் செலுத்தினார்.

இந்த விஜயத்தின் போது இளைஞர் பயிலிளவல்கள் அணி வகுப்பு மரியாதையுடன் பணிப்பாளரை வரவேற்றமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த அணி வகுப்புக்கு இளைஞர் பயிலிளவல்  என்.ஏ .நெதுஹங்ஸ  கட்டளை வழங்கினார்.

இந்நிகழ்விற்கு மேலதிக பணிப்பாளர் (பயிற்சி மற்றும் அபிவிருத்தி), உதவி பணிப்பாளர் (செயற்பாடு), மேல் மாகாண பணிப்பாளர், புளத்சிங்கள பயிற்சி நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் நிலைய பணிக்குழாமினர் பங்கு பற்றினர்.

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button