Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

தேசிய இளைஞர் படையணி “செனெஹி பியஸ” 32 ஆவது வீடு, அமைச்சர் ரொஷான் ரணசிங்ஹ அவர்களின் கரங்களால் மெதிரிகிரியவில் அன்பளிப்பு செய்யப்பட்டது .

நிலைபேறான அபிவிருத்தி நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, இளைஞர்களின் பலத்தை தேசிய அபிவிருத்திக்கு ஈடுபடுத்த முக்கிய பணியை மேற்கொள்ளும் தேசிய இளைஞர் படையணியின், சமூகத்தை வலுவூட்டும் இளைஞர்களின் பங்களிப்பு ” செனெஹி பியஸ” கருத்திட்டம் ஊடாக செயற்படுத்தப்படும் 58 வீடுகளை நிர்மாணிக்கும் கருத்திட்டத்தின் 32 ஆவது வீடு, மெதிரிகிரிய பிரதேச செயலக பிரிவில், இலக்கம் 91 கவுடுளுகம கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மெதிரிகிரிய, கவுடுளுகம ,இலக்கம் 269/2 இல் வசிக்கும் விசேட தேவையுடைய பிள்ளையொன்று இருக்கும் மற்றும் நீரிழிவு உட்பட பல நோய்களால் பாதிக்கப்பட்டு தொழில் செய்ய முடியாமல் பொருளாதார நெருக்கடியில் ஆதரவில்லாமல் இருக்கும் ஆர்.டீ.விஜேசிங்க மற்றும் ஜீ.ஜீ.பிரேமவதி தம்பதியினருக்கு நீர்ப்பாசன, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்ஹ அவர்களின் தலைமையின் கீழ் அன்பளிப்பு செய்யப்பட்டது.

பிரதேசத்திலுள்ள வர்த்தக சமூகம் உள்ளிட்ட நன்கொடையாளர்களின் பங்களிப்புடனும் 18 இலட்சம் ரூபாய்க்கு அண்மித்த பணச்செலவுடன் மற்றும் மெதிரிகிரிய தேசிய இளைஞர் படையணி நிலையத்தின் உழைப்பு பங்களிப்புடன் இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பங்குபற்றிய அமைச்சர் கருத்து தெரிவிக்கும் போது இளைஞர் படையணி வீட்டு கருத்திட்டத்தால் நிர்மாணிக்கப்படும் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு இலட்சம் ரூபாய் வீதம் தனது தனிப்பட்ட பணத்தால் வழங்க உறுதியளித்தார்.

இந்நிகழ்வுக்கு தேசிய இளைஞர் படையணி தவிசாளர் நிலந்த ஏகநாயக்க, பணிப்பாளர் சுஜீவ ரத்நாயக யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ , மேலதிக பணிப்பாளர் நிஷாந்த புஷ்பகுமார, கிழக்கு மாகாண பணிப்பாளர், மெதிரிகிரிய தேசிய இளைஞர் படையணி நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட நிலைய பொறுப்பதிகாரிகள், பிரதேச அரச அதிகாரிகள், பயிற்சி நிலைய ஆலோசகர்கள், youth cadet கள் உள்ளிட்ட பிரிவினர் பங்குபற்றினர்.

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button