Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

தேசிய இளைஞர் படையணி சர்வதேச கவனத்தை வென்றுள்ளது.

தேசிய இளைஞர் படையணியின் வாழ்க்கைத் திறன் பாடநெறி தற்சமயம் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட City and Guides நிறுவனத்தின் மூலம் அங்கீகாரம் பெற்ற பாடநெறியாக அமைந்துள்ளது. அதன் பிரதிபலனாக அந்தப் பாடநெறி தேசிய மட்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது என்பதை மகிழ்வுடன் அறிவிக்கின்றோம்.

தேசிய இளைஞர் படையணியுடன் இணையும் இளைஞர் யுவதிகளை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் தேசிய இளைஞர் படையணி, AIESEC நிறுவனத்துடன் விசேட கருத்திட்டம் ஒன்றிற்காக 2022 மே மாதம் 29ஆம் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

தேசிய இளைஞர் படையணி பயிற்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவின் நிகழ்ச்சித் திட்டமாக இந்தக் கருத்திட்டம் செயற்படுவதுடன் அதன் முதலாம் கட்டமாக 2022 ஜூலை மாதம் 14ஆம் திகதி தெஹிஓவிட்ட தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில் ‘Skill up’ என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்று உள்நாட்டு மற்றும் எகிப்து மற்றும் ஜெர்மன் வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவர்களின் பங்குபற்றுதலுடன் ஆரம்பிக்கப்பட்டது.

AIESEC நிறுவனமானது 1948 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அரச சார்பற்ற மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனமாவதுடன் இளைஞர் யுவதிகளுக்கு தலைமைத்துவ ஆற்றல்கள் மற்றும் திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கு, முழுமையாக இளைஞர்களால் நடத்தப்படுகின்ற சர்வதேச மேடையாகும். சர்வதேச ரீதியில் தேசிய இளைஞர் படையணி பயிலுனர்களுக்கு அனுபவங்களை வழங்குவதும் சர்வதேச ரீதியில் பிரச்சாரங்களை பெற்றுக் கொள்வதும் இக்கருத்திட்டத்தின் நோக்கமாக அமைவதுடன் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையங்களில்   எதிர்காலத்திலும் இவ்வாறான நிகழ்ச்சித் திட்டங்களை செயற்படுத்துவது தேசிய இளைஞர் படையணியின் எதிர்பார்ப்பாகும்.

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button