Register Now

பயிற்சி

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

தேசிய இளைஞர் படையணியின் ஆறுமாத கால கற்கை மற்றும் பிரயோக பயிற்சியானது அடிப்படையில் மென்திறன் மற்றும் ஆளுமை விருத்தியை மூலமாக கொண்டதாகும். ஒழுக்கம் மற்றும் தலைமைத்துவம் அதன் அடிப்படைக் கல்வி துறைகளாவதுடன் செயலணி பயிற்சி, சமூகம் சார்ந்த நிகழ்ச்சித்திட்டங்கள், தேசிய மற்றும் கலாச்சார நிகழ்வுகளும் தேசிய இளைஞர் படையணி கற்றல் செயல்முறைக்கு முறையாக சேர்க்கப்பட்டுள்ளது. தேசிய இளைஞர் படையணியின் பாடத்திட்டமும் ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம், தமிழ் மற்றும் அழகிய கலை போன்ற பாடப்பரப்புகளை உள்ளடக்கியுள்ளது.

ஆங்கிலம்

ஆங்கில மொழியில் காணப்படும் தேசிய மற்றும் சர்வதேச பிரயோக முக்கியத்துவத்தை கருத்தில் கொள்ளும்போது தேசிய இளைஞர் படையணி தனது நிறுவனத்தில் பயிற்சி பெறும் பயிலுனர்களின் திறன்கள் மற்றும் அறிவை மேம்படுத்துவதற்கு தேவையான தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதற்கமைய ஆங்கில மொழி தொடர்பில் பாடநெறியானது தொடர்பாடல், பேச்சு மற்றும் சேவை நிலைய தேவைகளை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்

நாட்டின் தொடர்பாடலில் சமகால சமூக அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தமிழ் மொழி பரந்த அடிப்படையில் கற்பிக்கப்படுகின்றது. தமது தாய்மொழி தமிழ் அல்லாத பயிலுனர்கள் இங்கு கற்றல் நடவடிக்கைகளை மிக ஆர்வத்துடன் செய்து வருவதனால் தேசிய இளைஞர் படையணி மூலம் மொழியை பழகுவதற்கும் பயிற்சி பெறுவதற்கும் உள்ள சம்பிரதாய முறைகளை விடுத்து மிக நவீன மற்றும் உற்சாகமான மாணவர் மையக் கற்கை முறைகளை அறிமுகம் செய்துள்ளது.

சீன மொழி

தேசிய இளைஞர் படையணியின் அனைத்து பயிற்சி நிலையங்களிலும் சீன மொழி கற்பிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் முன்னோடி கருத்திட்டமாக 2018 ஆம் ஆண்டு தம்புள்ளை பயிற்சி நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்ட சீன மொழி கற்பித்தல் தற்சமயம் மிகப் பயனுள்ள வகையில் அனைத்து நிலையங்களிலும் வியாபித்திருப்பது கற்பித்தல் முறையை இற்றைப்படுத்தியாகும்.

தகவல் தொழில்நுட்பம்

தகவல் தொழில்நுட்பமும் பாடத்திட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. வேலை உலகின் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் அது கற்பிக்கப்படுகின்றது. அனைத்து பயிற்சி நிலையங்களிலும் அனைத்து பயிலுனர்களுக்கு தேவையான வசதிகளுடன் கூடியதாக அமையப் பெற்றுள்ளது. தேசிய இளைஞர் படையணி தூர நோக்குடன் சிந்தித்து பயிலுனர்களுக்கு தேவையான வளங்கள் அனைத்தையும் வழங்கியுள்ளது. கணனி ஆய்வு கூடங்களை அறிமுகம் செய்வதன் மூலம் தகவல் தொழில்நுட்ப அறிவுடன் கூடியதாகவிருத்தல் 21 ஆம் நூற்றாண்டின் வாழ்க்கை திறன் ஆகும் என்பதை தேசிய இளைஞர் படையணி நன்கு புரிந்து கொண்டுள்ளது.

அழகியற் கலை

அழகியற் கலை என்பது பயிலுனர்களிடையே பிரபல்யமான பாடமாகும். இப்பாடமானது பயிலுனர்களின் ஆளுமை விருத்திக்கு மிக உதவியுள்ளது. தேசிய இளைஞர் படையணி பயிற்சியின் இடையே மேம்படுத்தப்பட்ட தமது திறன்களை வெளிக்காட்டி, தமது படைப்பாற்றல் தன்மையை மேடை ஏற்றுவதற்கு பயிலுனர்களுக்கு வருடாந்தம் நடைபெறும் “பௌருஷாபிமாண” கலைவிழா சிறந்த மேடை ஆகும்.

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button