Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

நிலைபேறான எதிர்காலத்திற்கு பசுமை மிக்க இளைஞர் படையணி ….

இலங்கையின் இளைஞர்களின்  வாழ்க்கைத்திறனை  மேம்படுத்துதல் போன்றே அவர்களை    சூழல் நேய விவசாயத்திற்கு ஆர்வமுள்ள குழுவினராக ஆக்கும் நோக்கில் 2021ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்ட “Y-Green” திட்டம் தற்சமயம் மிக வெற்றிகரமானதும் பயனுள்ளதுமான எண்ணக்கருவாக அமைந்துள்ளது.

விவசாயத்திலிருந்து விலகி சென்று கொண்டிருக்கும் இளம் தலைமுறையினரை அதற்கு ஊக்கப்படுத்துதல் மற்றும் அவர்களை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்கேற்க செய்தல் தற்சமயம் இந்த திட்டத்தின் ஊடாக முடிந்துள்ளது.

முதலில் இந்த எண்ணக்கருவை  செயற்படுத்தியது COVID 19 தோற்று நோய்  எதிரில் நாட்டிற்கு ஏற்படக்கூடிய  உணவு சவாலை வெற்றி  கொள்ளவதற்கான முயற்சியாகவாகும்.

எவ்வாரெனினும் தற்சமயம் நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியுடன் Y-Green கருத்திட்டம் காலத்துக்கு உகந்த கருத்திட்டமாக அமைந்துள்ளது.

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர்  படையணி பயிற்சி நிலையங்களிலுள்ள பணிக்குழாம் மற்றும் இளைஞர் பயிலிளவல்கள் மிக அர்ப்பணிப்புடன் இந்த விவசாய திட்டத்தை வெற்றிகரமாக பராமரித்து வருகின்றனர்.

நாட்டில் காணப்படும் நிலைமையுடன் அரச ஊழியர்களுக்கு  பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடும் வாய்ப்பை வழங்கி வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்துடன்  தேசிய இளைஞர் படையணியின்  Y-Green கருத்திட்டம் தற்சமயம்  மிக பரவலாக மேம்படுத்தப்பட்டு நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக செயற்படுத்தி வருகிறது.

இளைஞர் படையணி பயிற்சி நிலையங்களில் Y-Green விவசாய பயிர்ச்செய்கையை  ஊக்கப்படுத்தும் நோக்கில் கொழும்பு ௦7 , பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள தேசிய  இளைஞர் படையணி தலைமை காரியாலயத்திலும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் மேட்கொள்ளப்படுவது பாராட்டப்படவேண்டிய விடயமாகும்.

கொழும்பு நகரம் போன்ற நகர பிரதேசத்தில் நிலத்தை பெறுவது மிக கடினமான விடயமாகும் . ஆனால் கிடைக்கப்பெற்றுள்ள நிலத்தை முகாமைத்துவம் செய்து எதிர்பார்க்கப்பட்ட இலக்கை நோக்கிப் பயணிப்பதற்கு இளைஞர் படையணி பணிக் குழாம் சாமார்த்தியம் பெற்றுள்ளது . இங்கு கத்தரிக்காய், வெண்டிக்காய் , பயற்றங்காய் , தக்காளி , பச்சை மிளகாய் , காணிக் கொச்சிக்காய் , பீட் , முள்ளங்கி , மிளகாய் , சிறகவரை , பசளை போன்ற பயிர்ச் செய்கைகளை பயிரிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது . பயிர்ச்செய்கையின் போது நிலத்தை முகாமைத்துவம் செய்துகொள்ள விசேட முறைமைகள் கையாளப்பட்டுள்ளது.

இங்கு பயன்படுத்தப் பட்டுள்ள விசேட முறையாக ஹைட்ரோபோனிக்ஸ் (hydroponics) ஐ குறிப்பிடலாம் . தேசிய இளைஞர் படையணி  பயிற்சி நிலையங்களில் விவசாய பயிர் செய்கை திட்டங்களை ஆரம்பிப்பதற்கு முன்னர் அதற்கு தேவையான கரிம உரத்தை உற்பத்தி செய்யும் நடவடிக்கையும் வெற்றிகரமாக மேற்கோள்ளப் பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக மிக வெற்றிகரமான முறையில் டென்டோபியம்  வகைக்கு உரித்தான ஒகிட் மலர் செய்கையும் தலைமைக் காரியாலய வளாகத்தில் செய்யப்பட்டு வருகின்றது . இதன் மூலம் அதிக வருமானம், கூடிய அறுவடை போன்றே அதிக மலர்களையும்  பெற முடியும். இந்த மலர் செடிகளை விற்பனை செய்து பெறக்கூடிய பணம் இளைஞர் படையணி நலன்புரி நிதியத்திற்கு வழங்கப்படுவதுடன் அதன் மூலம் பணிக்குழாமின் நலன்புரி நடவடிக்கைகளை மிக பயனுள்ள வகையில்  மேற்கொள்ள அவர்களுக்கு முடிந்துள்ளது.

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button