Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

தம்புள்ள ஹோட்டல் பயிற்சி பாடசாலையின் சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் நீர்ப்பாசன, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரனசிங்க அவர்கள் கலந்து கொண்டார்.

தம்புள்ளை தேசிய இளைஞர் படையணி ஹோட்டல் பயிற்சி பாடசாலையின் 2023-1 ஆம் அணியின் சான்றிதழ் வழங்கும் வைபவம் கடந்த (07) ஆம் திகதி, நீர்ப்பாசன, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரனசிங்க அவர்களின் தலைமையின் கீழ் இடம் பெற்றது.

உள்நாட்டு வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளக்கூடிய ஹோட்டல் துறையினுள் காணப்படும் தொழில் வாய்ப்புகளுக்கு பயிலுனர்களை ஈடுபடுத்த இந்த ஹோட்டல் பயிற்சி பாடசாலைக்கு முடிந்துள்ளதுடன், அந்த வாய்ப்புகளை பரந்த அமைப்பில் ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதமாக செய்வதற்கு அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இங்கு அமைச்சர் கூறினார்

இந்நிகழ்விற்கு பிரதேச அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள், தேசிய இளைஞர் படையணியின் தவிசாளர் நிலந்த ஏக்கநாயக்க அவர்கள், தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் சபை, மாகாண பணிப்பாளர்கள், நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் பயிலுனர்கள் உள்ளிட்டவர்கள் பங்கு பற்றினர்.

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button