Register Now

பன்மைத்துவத்தில் ஒற்றுமை

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

பன்மைத்துவத்தில் ஒற்றுமை

கற்கை பாடங்கள், உடல் அப்பியாசங்கள், சமூக மற்றும் சமுதாய நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் விளையாட்டுப் போட்டி மற்றும் கலை விழா என்பன தேசிய இளைஞர் படையணியின் நாட்காட்டியில் இடம்பெறும் விடயங்களாகும். அவ்வாறான அம்சங்களை ஏற்பாடு செய்வதன் மூலம் பயிலுனர்களின் விஷேட திறன்களை ஊக்குவித்தல், குழு செயற்பாடுகளை மேம்படுத்துதல், தன்னம்பிக்கையை அதிகரித்தல், மன உறுதியை ஏற்படுத்துதல் போன்றன ஏற்படும். இத்துறைகள் மற்றும் செயற்பாடுகளுள் சமூக, சமுதாய மற்றும் பல கலாச்சார அங்கங்களின் ஊடாக பன்மைத்துவத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும். நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் சமூக கருத்திட்டங்களில் பயிற்சி பெறும் பயிலுனர்கள் மிக ஆர்வத்துடன் பங்கேற்பதுடன் இதனுடன் தொடர்புபடும் வெளி தரப்பினரிடமிருந்து தாராளமான அனுசரணை கிடைக்கப் பெறுகின்றது. அவ்வாறான இணைப்புச் செயற்பாடுகள் மூலம் பயிலுனர்களின் சிந்தனை செயல்முறை போன்றே பல்வேறு, பல்லின, பல கலாச்சாரம் கொண்ட சமூகத்தில் ஒற்றுமையுடன் வாழும் அனுபவம் விரிவுபடுத்தப்படும். தேசிய இளைஞர் படையணி பயிற்சி வழங்கும் நிறுவனம் ஒன்றாக அவர்களால் வழங்கப்படும் அனைத்து விடயங்களிலும் பன்மைத்துவத்தில் ஒற்றுமை காட்டுவதில் கவனம் செலுத்துகின்றது.

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button