Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

இளைஞர் படையணியைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு பராமரிப்பாளர் பாடநெறியின் தேசிய தொழில் தகைமையை வழங்குவதற்கு லங்கா மருத்துவமனைக்கும் தேசிய இளைஞர் படையணிக்குமிடையே உடன்படிக்கை கைச்சாத்திடல்

சர்வதேச அங்கீகாரம் பெற்ற சுகாதார சேவைகள் வழங்குநரான லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் மருத்துவமனைக்கும் தேசிய இளைஞர் படையணிக்குமிடையே அண்மையில் விசேட உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையின் பிரகாரம் தேசிய இளைஞர் படையணியின் 2022 ஆம் ஆண்டுக்கான முதலாவது குழுவிற்கு தமது தற்றுணிவுக்கேற்ப தேசிய இளைஞர் படையணியில் 14 நாள் ஆளுமை விருத்தி மற்றும் தலைமைத்துவ பயிற்சியை கற்ற பின்னர் லங்கா ஹொஸ்பிட்டஸ் உடன் இணைந்து இரண்டு மாத கால பராமரிப்பாளர் பாடநெறியின் தேசிய தொழில் தகைமையின் இரண்டாம் நிலையை  (NVQ Level 03) இலவசமாக கற்க முடியும்.

லங்கா மருத்துவமனையுடன் இணைந்த லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் அக்கடமியில் (LHA) இந்த பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர் தேசிய இளைஞர் படையணி தலைமையகத்தின் மூலம் ஜப்பான் மொழி பயிற்சி வழங்கப்படுவதோடு மேற்படி பயிற்சி பெற்றவர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் காணப்படுகின்ற ஜப்பான் நாட்டு தொழில் வாய்ப்பு வெற்றிடங்களுக்கு அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் கூட்டு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு தீப்தி லொக்குஆரச்சி மற்றும் தேசிய இளைஞர் படையணியின் தவிசாளர் கர்னல் தர்சன இரத்னாயக்க ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதோடு மேற்படி நிகழ்வில் இளைஞர் படையணியின் பயிற்சிகள் மற்றும் அபிவிருத்தி மேலதிகப் பணிப்பாளர் திரு சமன் குலசூரிய உள்ளிட்ட தேசிய இளைஞர் படையணியினதும் லங்கா மருத்துவமனையினதும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

“தெற்காசிய பிராந்தியத்தின் சுகாதாரச் சேவைகளுக்கு உகந்த ஆற்றல்களுடன் கூடிய சுகாதாரச் சேவை வல்லுனர்களை உருவாக்கும் நோக்கத்துடன் 2019 ஆம் ஆண்டில்  லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் அக்கடமி நிறுவப்பட்டது. அதற்கு தேவையான பூரணமான க்ளினிக் வசதிகள் எம்மிடம் காணப்படுகின்றன. LHA வழங்கும் பாடநெறிகள் உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஆகச் சிறந்த தகைமைகளுடைய சிறப்பு நிபுணத்துவ வல்லுனர்களால் திட்டமிடப்பட்டு நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. தேசிய இளைஞர் படையணியைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் அக்கடமியில் சிறந்த பயிற்சியை பெற்று சர்வதேச தரத்திலான அனுபவங்களுடன் கூடிய தேசிய தொழில் தகைமைகளை பெற முடியும்.” என லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு தீப்தி லொக்குஆரச்சி தெரிவித்தார்.

“இலங்கையின் முன்னணி தனியார் மருத்துவமனையான லங்கா மருத்துவமனையுடன் இணைந்து எமது பிள்ளைகளுக்கு தேசிய தொழில் தகைமையை பெறுவதற்கு வாய்ப்பு கிடைக்கின்றமை பெரும் பாக்கியமாகும். LHA இல் கோட்பாட்டு ரீதியானதும் செய்முறை ரீதியானதுமான இரண்டு பயிற்சிகளும் கிடைப்பதால் அவர்களுக்கு வெளிநாடுகளில் அதிக ஊதியத்துடன் கூடிய தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொள்ள முடியும். சுகாதார ஊழியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதன் மூலம் எமக்கு பெருமளவு அந்நியச் செலாவணியையும் ஈட்ட முடியும். தேசிய இளைஞர் படையணி எப்பொழுதும் ஆற்றல்களுடன் கூடிய தலைமைத்துவப் பண்புகளை கொண்ட இளைஞர் சந்ததியொன்றை நாட்டுக்கு உருவாக்கிக் கொடுக்கும் நோக்கத்துடனேயே செயற்படுகின்றது.” என தேசிய இளைஞர் படையணியின் தவிசாளர் கர்னல் தர்சன இரத்னாயக்க தெரிவித்தார்.

லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் தாதியர் கல்லூரி தனியார் சுகாதாரத் துறையின் சிறந்ததொரு தாதியர் கல்லூரியாகும். கடந்த 15 ஆண்டுகளாக அது இலங்கையின் தனியார் சுகாதாரத் துறையில் கோலோச்சி இருக்கும் சிறந்த தாதியர்களை உருவாக்கியுள்ளது.  LHA நிறுவப்பட்டதை தொடர்ந்து மருந்தாளர், மருத்துவ இராசாயன தொழில்நுட்பவியல் மற்றும் ப்ளேபொட்டொமி தொடர்பான சான்றிதழ் பாடநெறிகள், முதலுதவி மற்றும் பராமரிப்பு பயிற்சி பாடநெறிகள் உள்ளிட்ட ஏராளமான புதிய பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், முன்னணி தேசிய அமைப்புகளுக்கு தேவைக்கேற்ற வகையில் தயாரிக்கப்பட்ட பயிற்சி பாடநெறிகளும் நடாத்தப்படுகின்றன. LHA மருத்துவ பட்டப்படிப்பை கற்பதற்கு விருப்பம் கொண்டுள்ள மாணவர்களுக்கு கண்காணிப்பு நிகழ்ச்சியொன்றும் வழங்கப்படுகின்றது. LHA இலங்கையிலும் தெற்காசிய பிராந்தியத்திலும் முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களினால் வழங்கப்படுகின்ற பல்வேறு சுகாதாரச் சேவைகள் பாடநெறிகளுக்கு க்ளினிக் பயிற்சி அமர்வுகளையும் வழங்குவதற்கு அண்மையில் நடவடிக்கை எடுத்தது.

தேசத்தை மீளக் கட்டியெழுப்பும் புதிய சவாலுக்கு ஒத்துழைக்கக்கூடிய தலைமைத்துவப் பண்புகளையும் வலுவான ஆளுமையையும் கொண்ட இளைஞர் யுவதிகளுக்கு வழிகாட்ட வேண்டிய  தேவை அதிகமாக உணரப்பட்டுள்ள தற்போதைய சூழலில் 2021 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க பாராளுமன்றச் சட்டத்தின் கருத்திட்டமாக நிறுவப்பட்டு, 2003 ஆம் ஆண்டு ஒக்தோபர் மாதம் 10 ஆந் திகதிய 1309/17 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 01-2003 ஆம் இலக்க இளைஞர் படையணி கட்டளைகள் மூலம் இளைஞர் படையணி செயற்படுகின்றது.

 

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button