“செனெஹெ பியஸ” தேசிய இளைஞர் படையணி வீட்டு கருத்திட்டம் நாடளாவிய ரீதியில்
வீடு- கனவாக காணப்படும் சகோதர மக்களுக்கு இல்லத்தை உருவாக்குவோம் என்ற கருப்பொருளில் தேசிய இளைஞர் படையணியின் மூலம் மேற்கொள்ளப்படும் இன்னுமோர் தன்னார்வ சமூக உதவித் திட்டம் ஆக “செனெஹெ பியஸ” செயல்படுத்தப்படுகின்றது.
இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களின் எண்ணக் கருவிற்கமைய , தேசிய இளைஞர் படையணியின் தவிசாளர் கர்ணல் தர்ஷன ரத்னாயக்க அவர்களின் பூரண கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலின் கீழ் அனைத்து மாகாண பணிப்பாளர்களதும் ஆலோசனையுடனும் நாடளாவிய ரீதியில் கலந்து காணப்படும் அனைத்து இளைஞர் படையணி பயிற்சி நிலையங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு பயிற்சி நிலையத்திற்கு ஒரு வீடு என்ற அடிப்படையில் 58 வீடுகளை கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு இல்லம் ஒன்று தேவையான எமது சகோதர மக்களுக்கு நன்கொடையாக வழங்க இந்த திட்டம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய சென்ற அக்டோபர் மாதம் முதல் இதுவரை தேசிய இளைஞர் படையணி இளைஞர் பயிலிளவர்களின் பூரண பங்களிப்புடன் மற்றும் பிரதேசத்தில் வாழும் நன்கொடையாளர்களின் ஒத்துழைப்புடன் நாடளாவிய ரீதியில் இந்த நிகழ்ச்சித் திட்டம் செயல்படுத்தப் படுகின்றது.