இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய இளைஞர் படையணியின் எதிர்கால இணைந்த திட்டத்தை தயாரிப்பதற்கான பணிமனை நவம்பர் மாதம் 4,5 மற்றும் 5 ஆகிய மூன்று தினங்களில் குக்குலேகங்க லயா லெசர் ஹோட்டலில், இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் செயலாளர் அனுராத விஜேகோன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
நிறுவனத்தில் காணப்படுகின்ற போட்டித் தன்மை மற்றும் நடைமுறையிலுள்ள பாடநெறியின் தரத்தை மேம்படுத்துதல், மென்திறன் கொண்ட திறமையான இளைஞர்களுக்காக தொழில் சந்தையில் இடத்தை ஒதுக்குதல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளுக்காக இளைஞர்களை பயிற்றுவித்தல் மற்றும் எதிர்கால தொழில் சந்தையின் கேள்விக்கு ஏற்ற அதிக இளைஞர் பிரிவை உருவாக்குதல் போன்ற வாய்ப்புகளை இந்த பயிற்சி நடவடிக்கையை விரிவாக்குவதன் மூலம் அடைந்துகொள்ள முடியும் என அடையாளம் காணப்பட்டது. அதேபோன்று இளம் தலைமுறையினர் மீது தாக்கம் செலுத்தும் பிரச்சினைகள் மற்றும் அவர்களுடைய பலவீனங்களை அடையாளம் கண்டு அவற்றிற்குத் தகுந்த தீர்வை வழங்கவும் அவற்றிற்கான பலங்களை தந்திரோபாயமாக அடையாளம் காண்பது போன்ற விடயங்களும் இங்கு மேலும் கலந்துரையாடப்பட்டது.
இந்த நிகழ்விற்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் சந்திரரத்ன பல்லேகம, சமன் டீ வடுகே, பணிப்பாளர் நாயகம் காமினி விக்கிரமபால, இராஜாங்க அமைச்சின் செயலாளர் ரவீந்திர சமரவிக்கிரம ஆகியோர் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள், அமைச்சின் கீழ் செயற்படும் விளையாட்டு அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் அமல் எதிரிசூரிய, சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் சுதீர ஜயரத்ன, மனித வள மற்றும் தொழில் திணைக்களத்தின் திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சிப் பிரிவின் பணிப்பாளர் சுமித் பெரேரா ஆகியோரும், தேசிய இளைஞர் படையணியின் தவிசாளர் கர்ணல் தர்ஷன ரத்நாயக்க, தேசிய இளைஞர் படையணி சபையின் உறுப்பினர் கலாநிதி ஏ. எம். என். சீ. அபேசிங்ஹ, நிர்வாக மற்றும் நிதி மேலதிக செயலாளர் நிஷாந்த புஷ்பகுமார, பயிற்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் மேலதிக செயலாளர் சமன் குலசூரிய , உதவிப் பணிப்பாளர்கள், மாகாண பணிப்பாளர்கள், நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் தேசிய இளைஞர் படையணியின் முன்னாள் பயிற்சி மற்றும் அபிவிருத்தி மேலதிகப் பணிப்பாளர் நிவந்த கனுவன , வெளிவாரி வளவாளர்கள் உள்ளிட்ட தலைமை அலுவலக அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.