மேல் மாகாணத்துக்குரிய யக்கலை, கட்டுநாயக்க, திவுலப்பிட்டி மற்றும் அத்தனகல்ல ஆகிய தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையங்களுக்குரிய இளைஞர் கடெடட்களின் பங்குபற்றுதளுடன் “Youth கிளீனாகும் அன்பான பெப்ரவரி” நிகழ்ச்சி திட்டம் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி, தேசிய இளைஞர் படை யணியின் பணிப்பாளர் காமினி விக்ரமபால அவர்களின் தலைமையின் கீழ் யக்கலை பயிற்சி நிலையத்தில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது
அங்கு சிரேஷ்ட சிங்கள மொழி விரிவுரையாளர் சுஜீவ சிறிமெவன் அவர்களின் பங்குபற்றுதளுடன் இசை மற்றும் ரசனை நிகழ்சிகள், வினோத செயற்பாடுகள் (Fun Games) யக்கலைஅழகியல்கலை பாடசாலையின் நடன அம்சங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பல நடைபெற்றதுடன் இச்சந்தர்ப்பத்துக்கு கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லசித் பாசன அவர்கள், மேலதிக பணிப்பாளர்( நிர்வாகம் மற்றும் நிதி) நிஷாந்த புஷ்பகுமார அவர்கள், மேல் மாகாண பணிப்பாளர் லெப்டினன்ட் கர்ணல் ஜகத் குமார அவர்கள் , நிலையைப் பொறுப்பதிகாரிகள், ஆலோசர்கள் உட்பட இளைஞர் யுவதிகள் பலரும் பங்குபற்றினர்.