தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் பிரிகேடியர் சுஜீவ ரத்நாயக்க யூஎஸ்பி பிஎஸ்சி ஐஜி அவர்களின் எண்ணக் கருவிற்கு அமைய செயற்படுத்தப்பட்ட Y Rhythm 2024 ரியாலிட்டி நிகழ்ச்சி திட்டத்தின் மாபெரும் இறுதிப் போட்டி கடந்த 17ஆம் திகதி , விளையாட்டு பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன அவர்களின் தலைமையின் கீழ் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் டங்கன் வைட் கேட்போர்கூடத்தில் மிகக் கோலாகலமான முறையில் இடம்பெற்றது.
போட்டித் தொடரின் திறமையான மற்றும் பிரசித்தி பெற்ற நட்சத்திரமாக பண்டுவஸ்நுவர பயிற்சி நிலையத்தின் சிரான் தர்சன தெரிவு செய்யப்பட்டதுடன் ,இரண்டாமிடத்தை செங்கடகள பயிற்சி நிலையத்தின் ஹன்சி அனுத்தராவும், மூன்றாம் இடத்தை யக்கலை பயிற்சி நிலையத்தின் சித்துமினி திவ்யான்ஞலியும், நான்காம் இடத்தை வீரகெட்டிய பயிற்சி நிலையத்தின் அசான் தனஞ்ஜயாவும் பெற்றுக் கொண்டனர். தேசிய இளைஞர் படையணியின் 22 ஆவது வருடப் பூர்த்தியின் போது நாட்டிற்கு இளம் பாடகர் நட்சத்திரங்களை உருவாக்க இதன் மூலம் இயலுமை கிடைத்தமை விசேட அம்சம் ஆகும்.
நிபுணத்துவமிக்க மத்தியத்தர் குழுவின் கீழ் நடத்தப்பட்ட இந்த போட்டித் தொடர் யக்கலை அழகிய கலை பயிற்சி பாடசாலையின் பயிலுனர்ளின் நடன அம்சங்கள் மூலம் வண்ணமயமாக்கப்பட்டது.அனுசரணையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட பங்களிப்பின் மீது வெற்றியாளர்களுக்கு கிண்ணங்களும் பரிசில்களும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
இந்நிகழ்வுக்கு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் அருண பண்டார அவர்கள், அரச மட்டும் தனியார் துறை நிறுவனங்களின் பிரதானிகள், தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் பிரிகேடியர் சுஜீவ ரத்நாயக்க யூஎஸ்பி பிஎஸ்சி ஐஜி அவர்கள், மேலதிக பணிப்பாளர்கள், உதவிப் பணிப்பாளர்கள், மாகாண பணிப்பாளர்கள், நிலைய பொறுப்பதிகாரிகள், தேசிய இளைஞர் படை யணியின் ஆளணியினர் , இளைஞர் கடெட்கள் உள்ளிட்ட அதிகமானவர்கள் பங்கு பற்றினர்.