Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

2023 புது வருடத்திற்கான வாழ்த்துக்கள் …!

இலங்கை சுதேசத்தவர்களின் கலாச்சாரத்திற்கு அமைவாக நான் முதலில் உங்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்து சென்ற வருடங்களில் தேசிய இளைஞர் படையணியின் தவிசாளராக நியமனம் பெற்ற தினம் முதல் இதுவரை என்னுடைய பணி நடவடிக்கைகளில் எனக்கு ஒத்துழைப்பை வழங்கியமை தொடர்பில் உங்கள் அனைவருக்கும் எனது நன்றியையும் கௌரவத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் நாடொன்றின் முதுகெலும்பாக விளங்கும் இளம் தலைமுறையினர் ஆளுமை விருத்தி மற்றும் மென் திறன் விருத்தி மூலம் வலுவூட்டுவதில் அரசின் முன்னோடி இளைஞர் ஆளுமை விருத்தி நிறுவனமான தேசிய இளைஞர் படையணி, மலரும் புது வருடத்துடன் புதிய பாதையில் பயணிப்பதற்கான பாரதூரமான செயற்பாட்டின் அனுசர வேண்டுமென நான் இச்சந்தர்ப்பத்தில் உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் நிறுவனத்தின் எதிரில் உள்ள ஒரே ஒரு நோக்கமாக அமைய வேண்டியது சுதேச நேய திறமைகளுடன் கூடிய திறன்மிகு இளம் பிரிவினரை எதிர்காலத்திற்கு உருவாக்குவதாகும். அதற்காக புதிய மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு புதிய பாதைகளில் பயணிப்பதற்கான காலம் மலர்ந்துள்ளது என்பது என்னுடைய கருத்தாகும். ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தினுள் நேர்மறையான முன்னேற்றம் ஏற்படுவது மாற்றங்களின் மூலமாகும். சவால்களின் எதிரிலும் கூட நாங்கள் புதிய மாற்றங்களை தேடிச் செல்ல வேண்டும். பணி நடவடிக்கைகளை சரியான முறையில் புரிந்து கொண்டு, நிறுவன ரீதியில் ஏற்படும் மாற்றங்களுக்கு உங்கள் அனைவரினதும் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும் என்று நான் மிகவும் நம்புகிறேன்.

இலங்கையின் வரலாற்றில் எந்த ஒரு காலப்பகுதியிலும் முகம் கொடுக்காத பல துன்பங்களுக்கு முகம் கொடுப்பதற்கு எங்களுக்கு நேரிட்டுள்ளது. திண்ணமாக இந்த சவால்களை நாங்கள் வெற்றியடைய வேண்டும். எங்களுக்கு அதனை வெற்றி பெறுவது கடினமானது அல்ல. மனித இனத்தின் பரிணாமம் ஏற்பட்டதும் சவால்களின் முன்னிலையில் தளராமல் தமது தைரியத்தை கடும் நம்பிக்கையாக ஏற்படுத்திக் கொண்ட மனிதர்கள் மூலமாகும். எங்களது அதிர்ஷ்டானம் மூலம் பூர்த்தி செய்ய முடிவது நாங்கள் பரிபூரணமாக பொது நலனுக்காக வேண்டி மிகவும் உற்பத்தி திறனுடனும் வினைத்திறனுடனும் காலத்தை முகாமைத்துவம் செய்து சரியானதை சரியாக மேற்கொள்ளும் பொறுப்பை மேற்கொள்வதால் ஆகும்.

மலரும் நாளைய தினத்தில் எங்களுக்கு முகம் கொடுக்க ஏற்படும் அனைத்து எதிரான அசைவுகளையும் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பிரச்சினைகள், தடங்கல்கள் மீது நாம் மிக உணர்திறதுடன் இருக்க வேண்டும். இயற்கை பல தீர்வுகளை வழங்கும் சக்தி வாய்ந்த நடுவர் என்பதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அன்பு, கருணை மற்றும் காதலை சாத்தியமான அனைத்து பொங்கலிலும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு, விழுந்து கிடக்கும் ஒரு  நபருக்காவது எதிர்பார்ப்புடன் கூடிய நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய ஆசீர்வாதத்தின் சுப செய்தியை கட்டாயமான ஒரு நிபந்தனையாக ஏற்படுத்திக் கொள்வோம் நீங்கள் உள்ளிட்ட அனைவரும் புது வருடத்தில் பிரவேசிப்பது இலங்கை தாய் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக சிக்கல்கள் ஏற்பட்டுள்ள ஒரு பின்னணியில் ஆகும். பிரச்சனையான சிக்கல்களை ஒழிக்கும் ஒட்டுமொத்த பொறுப்பைக் கொண்டுள்ள எங்கள் எதிரில் உள்ள சவால்களை வெற்றி பெற்று சுபிட்சமான இலங்கையை கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளும் தீர்மானங்கள் தீர்வுகளை வெற்றி பெற மலரும் புது வருடத்தில் நாம் ஒற்றுமையாய் அர்ப்பணிப்போம். தேசிய இளைஞர் படையணியின் வகிவாகத்தை சரியான முறையில் சமூக மயப்படுத்தி எதிர்காலத்தில் நாட்டை பொறுப்பேற்க முன்வரும் இளைஞர்களை திறமையால் அறிவுக்கூர்மையால் போன்றே புதிய சிந்தனைகள் மூலம், மானிடநேய இளைஞர்களை உருவாக்குவது காலத்தின் தேவையா கும். அனைத்து தடங்கல்களையும் வெற்றி பெற்று சுபீட்சமிக்க தேசத்தை கட்டி எழுப்ப முடிவது அப்போதுதான்.

மலர்ந்த 2023 புது வருடம் உங்கள் அனைவருக்கும், உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும், பிள்ளைகளுக்கும் சமாதானம் சந்தோஷம் சௌபாக்கியம் நிறைந்த புது வருடமாகட்டும் என வாழ்த்துகிறேன்.

கேர்ணல் தர்ஷன ரத்னாயக்க ஆர்டப்பீ  ஆர்எஸ்பீ

தவிசாளர்

தேசிய இளைஞர் படையணி

2023.01.01 ஆம் தினம்

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button