தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளராக 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி பிரிகேடியர் சுஜீவ ரத்நாயக்க யூஎஸ்பி பிஎஸ்சி ஐஜி அவர்கள் தனது பணிகளை ஆரம்பித்தார்.ஒழுக்கம் தலைமைத்துவம் மற்றும் ஆளுமை விருத்தி ஆகிய முப்பெரும் நோக்குகளைக் கொண்ட தேசிய இளைஞர் படையணியின் முன்னோடியாக இளைஞர்களின் அபிலாசைகள் மற்றும் தொழிற்சந்தை நிலைமைகளை கருத்தில் கொண்டு பேண்தகு அபிவிருத்தி இலக்குகளுடன் பொருந்தும் வகையில் முதன்மையான வேலை திட்டங்களின் கீழ் தேசிய இளைஞர் படையணியை முன்னோக்கி கொண்டு செல்ல, பிரிகேடியர் சுஜீவ ரத்நாயக்க யூஎஸ்பி பிஎஸ்சி ஐஜி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தேசிய இளைஞர் படையணி அடைந்து கொண்ட இலக்கு ஆகும்.
அவர்கள் இரண்டு வருடத்திற்கு அண்மித்த காலம் இலங்கையின் இளைஞர்களின் அபிவிருத்திக்காக அர்ப்பணித்து செயற்பட்டதுடன் தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளராகவும் இலங்கை இராணுவாத்தின் பெயர் பெற்ற சிரேஷ்ட அதிகாரியாகவும் செய்த பணிகளுக்காக வேண்டி, தேசிய இளைஞர் படையணியின் ஒட்டுமொத்த ஆளணியினரின் நன்றி நவிதலை தெரிவிக்க 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதி தேசிய இளைஞர் படையணியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எளிமையான விழாவின் பின்னர் அவர்கள் இலங்கை ராணுவத்தின் தலைமையகத்தில் தமது பணிகளை பொறுப்பேற்க புறப்பட்டுச் சென்றார்.
இந்நிகழ்வுக்கு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் சார்பில் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர அவர்கள் தேசிய இளைஞர் படையணி தலைமை அலுவலகத்தின் மேலதிக பணிப்பாளர் (நிர்வாகம் மற்றும் நிதி) சட்டத்தரணி நிஷாந்த புஷ்பகுமார அவர்கள்,மேலதிக பணிப்பாளர் (பயிற்சி மற்றும் அபிவிருத்தி )சமன் குலசூரிய அவர்கள், இளைஞர் படையணியின் மாகாணப் பணிப்பாளர்கள், உதவிப் பணிப்பாளர்கள் மற்றும் தேசிய இளைஞர் படையணி தலைமை அலுவலக ஆளணியினரும் பங்கேற்றனர்.