Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

சுவிஸ் ஹோட்டல் பயிற்சிப் பாடநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த பயிலுனர்களின் சான்றிதழ் வழங்கும் வைபவம்…..

சுவிட்சர்லாந்து அரசு, இலங்கையின் பவர் நிறுவனம் மற்றும் தேசிய இளைஞர் படையணி இணைந்து தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையங்களில் நடத்தப்பட்ட SSG (Skills for Sustainable growth) Hospitality operations certification program ஐ வெற்றிகரமாக முடித்த பயிலுனர்களின் சான்றிதழ் வழங்கும் வைபவம் ஜனவரி (06) ஆம் திகதி , இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான சுவிசர்லாந்து தூதுவர் சிறி வோல்ட் அம்மையாரின் தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இங்கு பாடநெறியை வெற்றிகரமாக முடித்த 116 பயிலுனர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு பவர் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி மற்றும் முகாவைத்துவப் பணிப்பாளர் ரோல்ப் பிளேசர் அவர்கள் உள்ளிட்ட சுவிஸ் ஹோட்டல் முகாமைத்துவ அகடமி அதிகாரிகள், தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் பிரிகேடியர் சுஜிவ ரத்நாயக்க யுஎஸ்பி பிஎஸ்சி ஐஜி, மேலதிக பணிப்பாளர் (பயிற்சி மற்றும் அபிவிருத்தி ) சமன் குலசூரிய அவர்கள், உதவிப் பணிப்பாளர் (அபிவிருத்தி) இநோக்கா குணவர்தன அம்மையார் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பயிலுனர்களும் பங்கு பற்றினர்.

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button