Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

இலங்கை சர்வதேச பௌத்த அகடமி மற்றும் தேசிய இளைஞர் படை யணி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது…‌‌

இலங்கை சர்வதேச பௌத்த அகடமி மற்றும் தேசிய இளைஞர் படையணி மூலம் நடத்தவிருக்கின்ற தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழி தொடர்பான டிப்ளோமா (Level III) பாடநெறி இரு தரப்பினரிடையே ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடல் அக்டோபர் மாதம் 7ஆம் திகதி தேசிய இளைஞர் படையணி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது

இந்நிகழ்வில் தேசிய இளைஞர் படையணியை பிரதிநிதித்துவப்படுத்தி பணிப்பாளர் பிரிகேடியர் சுஜீவ ரத்நாயக்க யுஎஸ்பி பிஎஸ்சி ஐஜி, மேலதிக பணிப்பாளர் (பயிற்சி மற்றும் அபிவிருத்தி) சமன் குலசூரிய அவர்கள் உதவி பணிப்பாளர் (செயல்பாடு) டி.எம்.ரி. எம்.ரணசிங்க அம்மையார் அவர்கள் உள்ளிட்ட தேசிய இளைஞர் படையணியின் தலைமை அலுவலக அதிகாரிகள் பிரிவினர் மற்றும் இலங்கை சர்வதேச பௌத்த அகடமியை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் வளாகத் தலைவர் கலாநிதி உபாலி எம். சேதர அவர்கள், உதவிப் பேராசிரியர் ஹசந்தி யாப்பா அம்மையார் அவர்கள் (பகுதி தலைவர் தர நிர்ணயம்), பகுதி தலைவர் (நிர்வாகம் மற்றும் நிதி )மிராணி வரல்லகே அம்மையார் உள்ளிட்ட பிரிவினர் பங்குபற்றினர்.

இதன் மூலம் தேசிய இளைஞர் படையணிக்கு வருகைதந்து தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழி பற்றிய உயர் சான்றிதழ் பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் இளைஞர் கடெட்களுக்கு டிப்ளோமா பாடநெறியில் இணைந்து உயர் கல்வியில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும் .

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button