Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

யதார்த்தத்தை வலுவூட்டும் கனவை நனவாக்கும் வாய்ப்பு “”Y Rhythm 2024” தொடக்க விழா ……

தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் பிரிகேடியர் சுஜீவ ரத்நாயக்க யுஎஸ்பி பிஎஸ்சி ஐஜி அவர்களின் பூரண வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் “Y Rhythm 2024” ரியாலிட்டி நிகழ்சியின் தொடக்க விழா ஆகஸ்ட் (14) ஆம் திகதி இளைஞர் படையணியின் பணிப்பாளர் சுஜீவ ரத்னாயக் அவர்கள் தலைமையில் தலைமை அலுவலக கேட்போர் கூடத்தில் மிகவும் கோலாகலமான முறையில் இடம்பெற்றது.

யக்கலை அலகியல் கலைக்கூடத்தின் பயிலுனர்களின் மனம் கவரும் கலை நிகழ்வுகளால் அலங்கரிக்கப்பட்ட இந்நிகழ்வில் இளைஞர் படையணியின் மேலதிக பணிப்பாளர் பயிற்சி மற்றும் அபிவிருத்தி சமன் குலசூர்யா அவர்கள் உதவி பணிப்பாளர்கள் தலைமை அலுவலக அதிகாரிகள் மற்றும் பயிலுனர்கள் பங்கு பற்றினர் .

மனிதனின் கற்பனையின் ஆரம்ப நாளிலிருந்து மனித இலக்கியமும் கலை படைப்புகளும் உருவாக்கப்பட்ட என நாங்கள் நம்புகின்றோம். சமூகத்தின் பரிணாமத்தில் பங்காற்றுவது எமது பொறுப்பாவதுடன் அதனை தொடர்ந்து முன்னேற்றுவதற்காக புது விடயங்களை சேகரிக்க நாம் திறமையாக இருக்க வேண்டும். ஒரு நாட்டின் இளைஞர்கள் அதன் முதுகெலும்புகளாக இருக்கின்றனர் . பொருளாதார அரசியல் சமூக புரிந்துணர்வு போன்றே அழகிய கலை சிந்தனையும் இரசனையும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அவசியமானது ‌.

சமூகத்தின் பொறுப்புகளை திறமையாக நிறைவேற்றும் அரச நிறுவனமான தேசிய இளைஞர் படையணி, நாட்டின் எல்லா காலத்தில் இருக்கும் பிரச்சனைகளுக்கும் தீர்வாவதுடன் இளைஞர்களின் திறமைகளை முன்னேற்றவும் செயல்படுகின்றது. தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளரின் எண்ணக்கருவின் மீது உருவாக்கப்பட்ட “Y Rhythm 2024” ரியாலிட்டி நிகழ்ச்சி தேசிய இளைஞர் படையணியில் பாடல் திறமை காட்டும் இளைஞர் யுவதிகளின் திறமைகளை மதிப்பிடுவதற்காக ஒரு ஆக்கபூர்வமான அழகிய கலை முயற்சியாகும். நாட்டின் நான்கு திசைகளிலும் உள்ள நிலையங்களின் ஊடாக பாடல் திறமைக்கு ஒரு மதிப்பீடு வழங்கி அவர்களை சமூகமயமாக்குவதும் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக கருதப்படுகின்றது

இளைஞர் படையணி பாடநெறியை பயிலும் திறமை மிக்க இளைஞர் கடெட்கள் நிலைய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு மாகாண மட்டத்தில் இருந்து தேசிய மட்டத்திற்கு கொண்டு வருவது இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் Y Rhythm 2024 முதலாம் சுற்றின் போட்டிகள் நிறைவு பெற்று அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள் சிறந்த நிபுணத்துவம் வாய்ந்த மத்தியஸ்தர் குழுவின் கீழ் அடுத்த கட்ட போட்டிகளுக்கு தயாராக இருக்கின்றார்கள்

“Y Rhythm 2024” இது இன, மத பேதமற்ற இரசனையுடன் கூடிய தேசத்தினரை உருவாக்க முயலும் ஒழுக்கம் , தலைமைத்துவம் , ஆளுமையை உருவாக்கும் தேசிய இளைஞர் படையணியின் இன்னுமொரு அழகியல் கலைப் பயணமாகும் .

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button