தேசிய இளைஞர் படையணி ஹோட்டல் பயிற்சி பாடசாலையின் 2024 இரண்டாம் அணியின் சான்றிதழ் வழங்கும் வைபவம் டிசம்பர் 13 ஆம் திகதி இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை பிரதி அமைச்சர் (இளைஞர் விவகாரம்) எரங்க குணசேகர அவர்களின் தலைமையின் கீழ் தம்புள்ளை ஹோட்டல் பயிற்சி பாடசாலையில் மிகக் கோலாகலமான முறையில் இடம்பெற்றது.
தொழில்வாண்மை சமையல்கலை ,பேஸ்ட்ரி மற்றும் பேக்கரி, உணவு பானம், வரவேற்புத்துறை, வீட்டுபராமரிப்பாளர் மற்றும் உதவி பங்களா பொறுப்பாளர் ஆகிய பாடநெறிகளை வெற்றிகரமாக முடித்த 191 பயிலுனர்களுக்கும் மற்றும் தேசிய தொழிற் தகைமை (NVQ) பெற்ற பயிலுனர்கள் 24 பேருக்கும் இங்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் அருண பண்டார அவர்கள் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் , தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் பிரிகேடியர் சுஜீவ ரத்நாயக்க யுஎஸ்பி பிஎஸ்சி ஐஜி, இளைஞர் படையணியின் பணிப்பாளர் சபை, மாகாண பணிப்பாளர்கள் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் அதிகாரிகள், நிலைய பொறுப்பதிகாரிகள், ஆலோசகர்கள்,பயிலுனர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பிரிவினர் பங்கு பற்றினர்.