தேசிய இளைஞர் படை யணியின் இளைஞர் கடெட்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்துவதற்காக வேண்டி செயற்படுத்தப்படும் மாகாணங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டி – 2024, 9 மாகாணங்களினதும் 58 பயிற்சி நிலையங்களது இளைஞர் கடெட்களின் பங்குபற்றுதலுடன் கடந்த ஜூலை மாதம் 23 மற்றும் 2 4 ஆகிய தினங்களில் திவுலப்பிட்டிய இளைஞர் படையணி நிலைய விளையாட்டு அரங்கில் வெற்றிகரமாக இடம்பெற்றது
அந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு வெற்றி கேடயங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், தேசிய இளைஞர் படை யணியின் பணிப்பாளர் பிரிகேடியர் சுஜீவ ரத்நாயக்க யுஎஸ்பி பிஎஸ்சி ஐஜி அவர்கள் தலைமையில் இடம் பெற்றது.
வாயுத் துப்பாக்கி வெடி வைத்தல்,அம்பெறிதல், வொலிபோல், நெட்போல் மற்றும் கிரிக்கெட் ஆகிய போட்டி நிகழ்வுகள் ஆண் மற்றும் மகளிர் துறைகளில் இடம்பெற்றதுடன் முதலாம் இடத்தை மேல் மாகாண அணியும் இரண்டாம் இடத்தை வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாண அணிகளும் வென்றன.
இந்நிகழ்வுக்கு மேலதிக பணிப்பாளர்( நிதி மற்றும் நிர்வாகம்) சட்டத்தரணி நிஷாந்த புஷ்பகுமார, மேலதிக பணிப்பாளர்(பயிற்சி மற்றும் அபிவிருத்தி) சமன் குலசூரிய, மாகாண பணிப்பாளர்கள் , நிலைய பொறுப்பதிகாரிகள் ,ஆலோசகர்கள் ,தலைமை அலுவலக அதிகாரிகள், இளைஞர் கடெட்கள் உள்ளிட்ட பிரிவினர் பங்கு பற்றினர்.
1. வாயுத் துப்பாக்கி வெடி வைத்தல்
இரண்டாம் இடம் –ஆண்- வட மாகாணம்
முதலாம் இடம் – ஆண்- ஊவா மாகாணம்
இரண்டாமிடம் – மகளிர்- மேல் மாகாணம்
முதலாமிடம் -மகளிர் -சப்பிரகமுவ மாகாணம்
2. அம்பு எறிதல்
இரண்டாம் இடம்- ஆண்- வடமேல் மாகாணம் /மேல் மாகாணம்
முதலாம் இடம் -ஆண் –ஊவா மாகாணம்
இரண்டாம் இடம்- மகளிர்- மேல் மாகாணம்
முதலாம் இடம்- மகளிர் –சப்ரகமுவ மாகாணம்
3. வொலிபோல் -ஆண்
இரண்டாம் இடம் -ஆண் -வடமேல் மாகாணம்
முதலாம் இடம் –ஆண்- மேல் மாகாணம்
4. வொலிபோல் -மகளிர்
இரண்டாம் இடம்- மகளிர்- மேல் மாகாணம்
முதலாம் இடம் -மகளிர் -தென் மாகாணம்
5. நெட்போல்- மகளிர்
இரண்டாம் இடம்- மகளிர்- கிழக்கு மாகாணம்
முதலாம் இடம்- மகளிர்- சப்ரகமுவ மாகாணம்
6. கிரிக்கெட்- ஆண்
இரண்டாம் இடம்- மேல் மாகாணம்
முதலாம் இடம்- மத்திய மாகாணம்
7. கிரிக்கெட் மகளிர்
இரண்டாம் இடம் -மகளிர் சப்ரகமுவ மாகாணம்
முதலாம் இடம் – மகளிர் -வடமேல் மாகாணம்