“வாழ்க்கைத் திறன், விளையாட்டு, கலை மற்றும் தொழில் பயிற்சி என்ற நான்கு துறைகளையும் ஒன்றாக ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ள முடியுமாக இருந்தால் ஒழுக்கமுள்ள தலைமுறையொன்றை கட்டியெழுப்ப முடியும் எனவும், தற்சமயம் காணப்படும் கல்வி முறை கட்டாயமாக மாற்றப்பட வேண்டிய இடத்தில் இருக்கும்போது உயர் கல்வியில் இருந்து முன்னோக்கி செல்லும் பிரிவினரை தவிர மீதமுள்ள பிரிவினரை பிரயோக வாழ்க்கைத் திறன் போன்றே தொழில் அறிவுடைய பிரிவினராக உருவாக்கும் பொறுப்பு தேசிய இளைஞர் படையணியிடம் காணப்படுகின்றது ” என நீர்ப்பாசன, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரனசிங்க அவர்கள் கூறினார். அமைச்சர் இவ்வாறு கூறியது கடந்த (06) ஆம் திகதி, தேசிய இளைஞர் படையணி மூலம் திவுலப்பிட்டிய பயிற்சி நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்ட நெட்போல், வொலிபோல், வாயுத் துப்பாக்கி, அம்பெறிதல் விளையாட்டுக் கட்டிடத் தொகுதியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் ஆகும்.
விளையாட்டுத் தொகுதியை ஆரம்பித்ததன் பின்னர் இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை இடையே வொலிபோல் போட்டியொன்றும் இரத்னாவலி மகளிர் பாடசாலை , கம்பஹா சிறிகுறுச பாடசாலை இடையே நெட்போல் போட்டியும் கண்காட்சிப் போட்டிகளாக இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.
விளையாட்டு தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் மின்வலு மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர், கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருத்த அவர்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் இளைஞர் விவகார மேலதிக செயலாளர் சமன் வடுகே அவர்கள் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள், தேசிய இளைஞர் படையணி பணிப்பாளர் பிரிகேடியர் சுஜீவ ரத்நாயக்க அவர்கள், பிரதேச அரசியல் பிரமுகர்கள், அதிபர்கள், தேசிய இளைஞர் படையணி பணிப்பாளர் சபை, மாகாண பணிப்பாளர், நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் பயிலுனர்களும் பங்கு பற்றினர்.