தேசிய இளைஞர் படையணி “செனெஹி பியஸ” வீட்டுக் கருத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இன்னுமொரு வீடு மாவத்தகம, 02 பியவர, சமகி உயனவில் வசிக்கும் திருமதி எம். ஏ.தில்ஹானி குமாரி உள்ளிட்ட குடும்ப அங்கத்தவர்களுக்கு கையளிக்கும் நடவடிக்கைகள் சமீபத்தில் தேசிய இளைஞர் படையணி பணிப்பாளரின் தலைமையின் கீழ் இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கு தேசிய இளைஞர் படையணி மேலதிக பணிப்பாளர் (பயிற்சி மற்றும் அபிவிருத்தி), உதவிப் பணிப்பாளர் (பயிற்சி), வடமேல் மாகாண பணிப்பாளர், மாவத்தகம பயிற்சி நிலையத்தின் நிலையைப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட நிலையைப் பொறுப்பதிகாரிகள், அரச அதிகாரிகள், ஆலோசகர்கள், பிரதேசவாசிகள், இளைஞர் பயிலிளவல்கள் உள்ளிட்ட பிரிவினர் பங்கு பற்றினர்.