தேசிய இளைஞர் படைணியின் வருடாந்த கலை விழா மற்றும் விருது வழங்கும் வைபவம் கடந்த (01) ஆம் திகதி, சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரீன் பெர்னாந்து அவர்களின் தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மிக கோலாகலமான முறையில் இடம் பெற்றது.
இங்கு நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையங்களிலுள்ள வாழ்க்கை திறன் , தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடநெறிகள் மற்றும் தம்புள்ளை ஹோட்டல் பயிற்சி பாடசாலையில் பயிற்சி பாடநெறிகளை வெற்றிகரமாக முடித்து விசேட திறமைகளை வெளிப்படுத்திய பயிலுனர்களை கௌரவித்தல், விளையாட்டு தொடர்பில் பல்வேறு வெற்றிகளை பெற்றுக்கொண்ட ஆலோசகர்கள் மற்றும் youth cadet களை கௌரவித்தல் , தேசிய இளைஞர் படையணி தலைமைக் காரியாலயத்தில் மற்றும் பயிற்சி நிலையங்களில் கடமையாற்றும் ஆலோசர்கள் மற்றும் அதிகாரிகளை கௌரவித்தல் மற்றும் பயிலுனர்களின் கலை ஆற்றல்களை வெளிக்கொண்டு வருதல் இதன் பிரதான நோக்கங்களாகும்.
இவ்விழாவில் அரங்கேற்றப்பட்ட அனைத்து கலாச்சார அம்சங்களும் தேசிய இளைஞர் படையணியின் ஆளணியினர் மற்றும் பயிலுனர்களால் முன்னிலைப்படுத்தப்பட்டமை விஷேட அம்சமாகும்.
இந்நிகழ்வுக்கு கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே அவர்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கே. மகேசன் அவர்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின்இளைஞர் விவகாரம் தொடர்பிலான மேலதிக செயலாளர் தினேஷ் விதானகமாரச்சி அவர்கள், போலீஸ் மா அதிபர் ரீ .எம்.டப்.டீ.தென்னகோன் அவர்கள், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்சி திட்டத்தின்(UNDP) இலைங்கைக்கான நிரந்தர பிரதிநிதி அசூசா குபோடா அம்மையார், City & Guilds நிறுவனத்தின் இலங்கை, மாலைதீவு மற்றும் பங்களாதேஷ் நிரந்தர பிரதிநிதி ஹிபாஸ் அஷ்ரப் அவர்கள், தேசிய இளைஞர் படையணியின் சபை தலைவர் சதுரங்க உடவத்த அவர்கள், தேசிய இளைஞர் படையணி பணிப்பாளர் பிரிகேடியர் சுஜீவ ரத்நாயக்க யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள், தேசிய இளைஞர் படையணியின் முன்னாள் தவிசாளர்கள் மற்றும் பணிப்பாளர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அதிகாரிகள், தேசிய இளைஞர் படையணி மேலதிக பணிப்பாளர்கள், உதவிப் பணிப்பாளர்கள், மாகாண பணிப்பாளர்கள், நிலைய பொறுப்பதிகாரிகள், ஆளணியினர், Youth Cadet கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பலர் பங்குபற்றினர்.