தேசிய இளைஞர் படைணியின் வருடாந்த கலை விழா மற்றும் விருது வழங்கும் வைபவம் 2023.01.17 ஆம் தினம் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் பிரதமர் மாண்புமிகு தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மிக கோலாகலமான முறையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ ரோஹண திசாநாயக்க அவர்கள், ஜனாதிபதி ஆளணிப் பிரதானி சாகல ரத்நாயக்க அவர்கள், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதான அவர்கள், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அதுகோரல உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர்.
இங்கு நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையங்களிலுள்ள வாழ்க்கை திறன் பாடநெறி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில பாடநெறிகளை பயின்று விஷேட திறமையை வெளிப்படுத்திய பயிலுனர்கள், பல்வேறு தொழில் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சிப் பாடநெறிகளை பயின்று விசேட திறமைகளை வெளிப்படுத்திய பயிலுனர்களுக்காக சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளதுடன் தேசிய இளைஞர் படையணி தலைமைக் காரியாலயத்தில் மற்றும் பயிற்சி நிலையங்களில் கடமையாற்றும் ஆலோசர்கள் மற்றும் அதிகாரிகளும் கௌரவிக்கப்பட்டனர்.
இவ்விழாவில் அரங்கேற்றப்பட்ட அனைத்து கலாச்சார அம்சங்களும் தேசிய இளைஞர் படையணியின் ஆளணியினர் மற்றும் பயிலுனர்களால் முன்னிலைப்படுத்தப்பட்டமை விஷேட அம்சமாகும். தேசிய இளைஞர் படையணியின் 20 ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதும், பயிலுனர்களின் கலை திறமைகளை அரங்கேற்றுவதும், பயிலுனர்கள் மற்றும் ஆலோசர்களை கௌரவிப்பதும், எதிர்வரும் காலங்களுக்காக புத்துணர்வை பெற்றுக் கொள்ளும் நோக்கிலும் இந்த விழா.