உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிர்மாணத் துறையில் காணப்படும் தொழில் வாய்ப்புகளுக்காக இயந்திரங்கள் துறையில் முறையான பயிற்சியை வழங்கும் நோக்கில் காலி RSM கனரக வாகன பயிற்சி நிறுவனத்துடன் (RSM Heavy vehicle and heavy machinery training institute) தேசிய இளைஞர் படையணி 2022 ஜூலை 12 ஆம் திகதி தேசிய இளைஞர் படையணியின் தவிசாளர் கர்ணல் தர்ஷண ரத்நாயக்க, மேலதிகப் பணிப்பாளர் (பயிற்சி மற்றும் அபிவிருத்தி) சமன் குலசூரிய, உதவிப் பணிப்பாளர் (அபிவிருத்தி) இனோகா குணவர்தன, சட்ட அதிகாரி சாந்தனி கரவிட, உதவிப் பணிப்பாளர் (பயிற்சி) ஜனனி அபேசிங்ஹ, பாடநெறி இணைப்பாளர் திளின சம்பத் ரத்நாயக்க ஆகியோரதும் மற்றும் RSM கனரக வாகன பயிற்சி நிறுவனத்தின் முகாமையாளர் கே.சரவண பிரபாகர் உள்ளிட்டவர்களின் பங்குபற்றுதலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
பெக்கோலோடர் இயக்குனர் மற்றும் எக்ஸ்கெவேட்டர் இயக்குனர் பாடநெறிக்கான ஆரம்ப நேர்முகப் பரீட்சை 2022 ஜூலை மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
பயிற்சி காலத்தினுள் சீருடை மற்றும் வதிவிட வசதிகள் இலவசமாக வழங்கப்படும்.
முதலாவது அணிக்கு 50 பயிலுனர்களை ஆட்சேர்க்க எதிர்பார்க்கப்படுவதுடன் அதில் காலி மாவட்ட பயிலுனர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முதலாவது அணி நிறைவடைந்த பின்னர் இன்னும் இரு அணிகளை பயிற்சிப் பாடநெறிக்கு ஆட்சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பாடநெறிக்கு நேரடியான பயிற்சி மற்றும் தேசிய மட்டத்தில்(NVQ Level-03) தொழில் தகைமை வழங்கப்படுவதுடன் பயிற்சியின் பின்னர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளுக்கு செல்வதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.
இங்கு தேவையான கோட்பாட்டு மற்றும் பிரயோக அறிவு போன்றே ஆங்கில மொழி அறிவும் (தொழில்நுட்ப) தொடர்பிலான 30 நாள் பயிற்சி வழங்கப்படுவதுடன் 14 நாள் வாழ்க்கைத் திறன் பயிற்சியொன்றும் காலி தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
உங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் இந்த பயிற்சிப் பாடநெறிக்கு தேசிய இளைஞர் படையணி ஒரு பயிலுனருக்காக ரூபாய்.59500.00 ஐ செலவிடுகின்றது. பெக்கோலோடர் இயக்குனர் பயிற்சி பாடநெறியை தெரிவு செய்யும் பயிலுனர்களுக்கு விரும்பினால் எஸ்கெவேட்டர் இயக்குனர் பயிற்சி பாடநெறியை கற்பதற்கு வாய்ப்புள்ளத்துடன் எஸ்கெவேட்டர் இயக்குனர் பயிற்சி பாடநெறியை தெரிவு செய்யும் பயிலுனர்களுக்கு பெக்கோலோடர் இயக்குனர் பயிற்சி பாடநெறியை இலவசமாக கற்பதற்கும் வாய்ப்பு உள்ளது.
பயிற்சி காலத்தினுள் சீருடை மற்றும் வதிவிட வசதிகள் இலவசமாக வழங்கப்படும்