தேசிய இளைஞர் படையணி “செனெஹி பியஸ” வீட்டுக் கருத்திட்டத்தின் கீழ் தென் மாகாணத்தின் நெலுவ தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட வீடு, சிங்கராஜ வனத்தின் எல்லையில் அமைந்துள்ள நெலுவ கொஸ்முல்ல 223/D கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் பி.கே. சுமித் மதுரங்க அவர்களுக்கு ஒப்படைத்தல் தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் பிரிகேடியர் சுஜீவ ரத்தநாயக்க அவர்களின் தலைமையில், கடந்த ஜூலை 21ஆம் திகதி இடம்பெற்றது.
பிரதேசத்தில் வசிக்கும் தனவந்தர்களின் நிதி உதவியுடன், யூத் கடெட்கள் மற்றும் ஆளணியினரின் உழைப்பு பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீடு பிரித் ஓதுதல் மத்தியில் சுப முகூர்த்தத்தில் பயனாளி குடும்பத்திற்கு ஒப்படைக்கப்பட்டதுடன், இந்த நிகழ்விற்கு அரச அதிகாரிகள், தேசிய இளைஞர் படையணி மேலதிக பணிப்பாளர் (நிர்வாகம் மற்றும் நிதி), தென் மாகாண பணிப்பாளர், நிலைய பொறுப்பதிகாரிகள், ஆளணியினர் மற்றும் பயிலுனர்களும் பங்கு பற்றினர்.