நுவரெலியா கட்டுமான பிரதேசத்தில் வயது 16 -28 இடைப்பட்ட இளைஞர்களுக்காக தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு காணப்படும் பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, அதற்கான நீண்ட காலத் தீர்வாக நுவரெலியா கட்டுமான சர்வதேச பௌத்த நிலையத்தை மையப்படுத்தி, நுவரெலியா தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்துடன் இணைந்து தகவல் தொழில்நுட்பம் மற்றும் மொழிப் பயிற்சி அலகுகளை தாபிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடல், நுவரெலியா கட்டுமான சர்வதேச பௌத்த நிலையத்தின் விகாரதிபதி வணக்கத்துக்குரிய கலஹிட்டியாகொட சுமனரதன தேரர் மற்றும் தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் பிரிகேடியர் சுஜீவ ரத்நாயக்க இடையே கடந்த (24) , இளைஞர் படையணி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
நுவரெலியா இளைஞர் படையணி பயிற்சி நிலையத்திற்கு பிரவேசிப்பதற்கு போக்குவரத்து மற்றும் பொருளாதார பிரச்சனை காணப்படும் பிரதேசங்களில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு கட்டுமான சர்வதேச பௌத்த நிலையத்துடன் இணைந்து தகவல் தொழில்நுட்பம் மற்றும் மொழிப் பயிற்சி அலகுகளை தாபித்து தேசிய இளைஞர் படையணி மூலம் பயிற்சிப் பாடநெறிகளை நடத்துமாறு சர்வதேச பௌத்த நிலையத்தின் விகாரதிபதி வணக்கத்துக்குரிய தேரரின் வேண்டுகோளுக்கிணங்க இந்த அலகை தாபிப்பதற்கு தேசிய இளைஞர் படையணி தனது இணக்கப்பாட்டை தெரிவித்தது.
இந்நிகழ்விற்கு தேசிய இளைஞர் படையணியின் மேலதிக பணிப்பாளர் (பயிற்சி மற்றும் அபிவிருத்தி), உதவி பணிப்பாளர் (செயற்பாடு), உதவி பணிப்பாளர் (மத்திய மாகாணம்), சட்ட அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பங்கு பற்றினர்.