தொழில்நுட்ப துறையில் திறன்களுடன் கூடிய உழைப்பாளர்களை உருவாக்கும் நோக்கில் தேசிய இளைஞர் படையணி , CINEC campus உடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டது . இந்நிகழ்வுக்கு தேசிய இளைஞர் படையணி தவிசாளர் கேர்னல் தர்ஷன ரத்னாயக்க ,மேலதிக பணிப்பாளர் (பயிற்சி மற்றும் அபிவிருத்தி) சமன் குலசூரிய , மேலதிக பணிப்பாளர் (நிர்வாகம் மற்றும் நிதி ) நிஷாந்த புஷ்பகுமார ,உதவிப் பணிப்பாளர் (அபிவிருத்தி ) இனோக்கா குணவர்தன , சட்ட அதிகாரி சாந்தணி கரவிட ஆகிய அதிகாரிகளும் CINEC Campus இன் தவிசாளர் கேப்டன் அஜித் பீரிஸ் , உப தவிசாளர் (நிதி , நிர்வாகம் , கருத்திட்டம் மற்றும் திட்டமிடல் ) தரங்கா கமகே உள்ளிட்டோரும் பங்குபற்றினர் . இங்கு Marine Welder Fitter, Certificate in Welding Technology (4G), Lathe Machine Operation, Aluminum Fabricating Technician ஆகிய பாடநெறிகளையும் மற்றும் ஏனைய தொழில் பயிற்சி பாடநெறிகளை பயில்வதற்கும் வாய்ப்புக் கிடைக்கும் .