ஒத்துழைப்பை வழங்கும்
கிராமிய மட்டத்தில் எரிபொருள் பதிவுக்குக் தேவையான “தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திரத்தை” இலவசமாக தயாரித்து வழங்கும் சமூக உதவிக் கருத்திட்டமொன்றை தேசிய இளைஞர் படையணியால் நாடளாவிய ரீதியில் பரந்து காணப்படும் இளைஞர் படையணி பயிற்சி நிலையங்களின் மூலம், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், புகையிரத நிலையங்கள், பேரூந்து தரிப்பிடங்கள் போன்ற பொது இடங்களில் செயற்படுத்தப்படும்.
இங்கு நாடளாவிய ரீதியில் பரந்து காணப்படும் 58 இளைஞர் படையணி பயிற்சி நிலையங்களிலுள்ள ஆலோசகர்கள் மற்றும் இளைஞர் பயிலிளவல்களின் பங்களிப்புடன் QR குறியீட்டுடன் (QR Code) ” தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திரத்தை ” பெற்றுக்கொள்ள பதிவுசெய்து கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொது மக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்.