தேசிய இளைஞர் படையணி தம்புள்ளை La Hotelier ஹோட்டல் பயிற்சி பாடசாலையின் 2022 ஆம் ஆண்டு இரண்டாம் அணிக்கு ஆட்சேர்ப்பு ஆரம்பிக்கும் வைபவம் 2022.07.25 ஆம் திகதி இடம்பெற்றது. அதற்கு 194 புதிய பயிலுனர்கள் பங்குபற்றினர். இது ஆறு மாத கால முழு நேர பாடநெறியாவதுடன் அந்த காலக்கட்டத்தில் உணவு பானம் மற்றும் வதிவிட வசதிகள் தேசிய இளைஞர் படையணி மூலம் இலவசமாக வழங்கப்படும்.
அனைத்து பாடநெறிகளும் இலவசமாக வழங்கப்படுவதுடன், பாட நெறிகளுக்கான கோட்பாட்டு மற்றும் பிரயோகப் பயிற்சிகள் வழங்கப்படும். பாடநெறிகள் ஐந்து கட்டங்களாக செயற்படுத்தப்படும். அவையாவன,
சர்வதேச சமையற்கலை (International cookery) NVQ Level IV
உணவக உதவியாளர் (Food & Beverage) NVQ Level IV
பேஸ்ட்ரி மற்றும் பேக்கரிப் பிரிவு (Pastry & Bakery) NVQ Level IV
ஹோட்டல் தங்குமிட பராமரிப்பு பிரிவு (Hotel House Keeping) NVQ Level III
வரவேற்புப் பிரிவு(Front Office) NVQ Level III
ஹோட்டல் பயிற்சி பாடநெறி காலத்தினுள் பயிலுனர்களுக்கு ஆளுமை விருத்தி, தலைமைத்துவம், வாழ்க்கைத் திறன் விருத்திப் பயிற்சி, சீன மொழி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழி பற்றிய அடிப்படை அறிவும் தேசிய இளைஞர் படையணியால் வழங்கப்படும். ஆறு மாத கால பயிற்சியின் பின்னர் தொழிலுடன் கூடிய பயிற்சிக்காக ஹோட்டல் துறையில் நிறுவனங்களுக்கு பயிலுனர்களை அனுப்புவதற்கும் தேசிய இளைஞர் படையணி பயிலுனர்களுக்காக மேற்கொள்ளும் விசேட நடவடிக்கையாகும்.