விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் செயற்படும் தேசிய இளைஞர் படையணியின் “சமூகத்தை வலுவூட்டும் இளைஞர் பங்களிப்பு” கருத்திட்டத்திற்கு அமைய வாரியபொல தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தினால் ரூபாய் 4 மில்லியன் பெருமதி வாய்ந்ததாக நிர்மாணிக்கப்பட்ட “செனெஹெ பியஸ” புதிய வீடு வாரியபொல சுமங்கல அத்துரு மாவத்தையில் வசிக்கும் எச். எம். இந்திராணி ஹேரத் என்பவருக்கு வழங்குவது வாரியபொல நிலைய பொறுப்பதிகாரி அவர்களின் அழைப்பில் 2022/06/09 ஆம் திகதி வாரியபொல பிரதேச செயலாளர் மற்றும் தேசிய இளைஞர் படையணி தவிசாளர்/பணிப்பாளர் கர்னல் தர்சன ரத்நாயக்க அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் சபை, அரச அதிகாரிகள் மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.