வெளிநாட்டு தொழில் கனவை நிஜப்படுத்திக்கொள்ள முயற்சிக்கும் இலங்கையின் இளைஞர் யுவதிகளுக்கு உதவிடும் நோக்கில் தேசிய இளைஞர் படையணி, வயம்ப தொழில்நுட்ப கல்லூரியுடன் சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டது. இந்நிகழ்வில் தேசிய இளைஞர் படையணியின் தவிசாளர் கேர்னல் தர்ஷன ரத்நாயக்க, மேலதிக பணிப்பாளர் (நிர்வாகம் மற்றும் நிதி) நிஷாந்த புஷ்பகுமார, உதவிப் பணிப்பாளர் (அபிவிருத்தி) இனோகா குணவர்தன, சட்ட அதிகாரி சாந்தனி கரவிட ஆகிய அதிகாரிகள் மற்றும் வயம்ப தொழில்நுட்ப கல்லூரியின் பணிப்பாளர் யூ.ஐ.நியதடுபொல, அதிபர் ஆர். ஏ.ஏ.ஆர். ரணவெள்ள உள்ளிட்ட அதிகாரிகளும் பங்குபற்றினர்.
இங்கு,
Food and Beverage (Steward)
Barista (Coffee Maker)
Facility Management Assistant
ஆகிய பாடநெறிகள் மற்றும் ஏனைய தொழில் பயிற்சி பாடநெறிகளையும் பயில்வதற்கு பயிலுனர்களுக்கு வாய்ப்புக்கிடைக்கும்.