இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு ஹோட்டல் துறை தொடர்பில் முழுமையான தெளிவையும் பிரயோக அறிவையும் வழங்கி சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழுடன் உள்நாட்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு ஈடுபடுத்தும் நோக்கத்துடன் தேசிய இளைஞர் படையணி மற்றும் சுவிஸ் ஹோட்டல் முகாமைத்துவ அகடமி இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடல் கடந்த 17 ஆம் திகதி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றது .
செங்கடகலை மற்றும் நாவுலை ஆகிய தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையங்கள் மூலம் இந்த பாடநெறியை ஆரம்பித்து ஏனைய நிலையங்களிலும் விரிவாக்கம் செய்து ஹோட்டல் முகாமைத்துவம் மற்றும் அதனுடன் இணைந்த 10 பிரிவுகளுடன் கூடிய பாடத்திட்டமொன்றை பயிலுனர்களுக்கு கற்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் TOT பாடநெறி மூலம் பாடநெறி உள்ளடக்கம் தொடர்பில் பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவிப்பதும், பாடநெறியினுள் அல்லது பாடநெறி ஆரம்பிக்க முன்னர் தேசிய இளைஞர் படையணி மூலம் 14 நாட்களுக்கான வாழ்க்கைத் திறன் பயிற்சியையும் பயிலுனர்களுக்கு வழங்கப்படும். இந்த SSG பாடநெறி ஆரம்பிக்கப்படுவது Pilot Run ஒன்றின் மூலமாகும். அதன் பின்னர் இரு தரப்பினரதும் இணக்கப்பாட்டின் படி 2025 டிசம்பர் மாதம் இறுதி வரை இந்தப் பாடநெறி நடத்தப்படும் .
புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் சந்தர்ப்பத்திற்கு இலங்கை – மாலைத்தீவு சுவிட்சர்லாந்து தூதுவராலய பிரதி தூதுவர் ஒலிவர் ப்ராஸ், இலங்கை – மாலைத்தீவு சுவிட்சர்லாந்து தூதுவராலய முதலாவது செயலாளர் டொரிஸ் மநெர், சுவிஸ் ஹோட்டல் முகாமைத்துவ அகடமியின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரால்ப் ப்ளெசர் உள்ளிட்ட அதிகாரிகள், தேசிய இளைஞர் படையணி தவிசாளர் நிலந்த ஏகநாயக்க, பணிப்பாளர் பிரிகேடியர் சுஜீவ ரத்நாயக யூஎஸ்பீ பீஎஸ் ஐஜீ உள்ளிட்ட அதிகாரிகளும் பங்குபற்றினர்.