ஆடைத் தொழில் துறையில் தொழில் வாய்ப்புகளுக்காக பொருத்தமான இளைஞர் யுவதிகளை தேசிய இளைஞர் படையணி மூலம் தெரிவு செய்ததன் பின்னர் அவர்களுக்கு அடிப்படை ஆளுமை விருத்தி பயிற்சியை வழங்கி, குறுங்கால பயிற்சி நிகழ்ச்சி மூலம் பயிற்சியை வழங்குதல் இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபை மூலம் மேற்கொள்ளப்படும். அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கைச்சாத்திடல் சென்ற 24 ஆம் திகதி, தேசிய இளைஞர் படையணியின் தவிசாளர் கர்ணல் தர்ஷன ரத்நாயக்க அவர்கள் மற்றும் இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் தவிசாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி எரங்க பஸ்நாயக்க அவர்களிடையே இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையில் மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் சந்தர்ப்பத்தில; தேசிய இளைஞர் படையணியின் மேலதிகப் பணிப்பாளர் (பயிற்சி மற்றும் அபிவிருத்தி) சமன் குலசூரிய அவர்கள், உதவிப் பணிப்பாளர் செல்வி இனோகா குணவர்தன , இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் உப தலைவர் மகேஷ் ஆரியரத்ன அவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.