தேசிய இளைஞர் படையணியின் கீழ் நடத்தப்பட்டு வருகின்ற தம்புள்ள தேசிய இளைஞர் படையணி ஹோட்டல் பயிற்சிப் பாடசாலையின் தற்கால நிலைமை, அதன் செயற்பாடு மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடும் நிகழ்சித்திட்டமொன்றில் கடந்த (25) ஆம் திகதி, தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் பிரிகேடியர் சுஜீவ ரத்நாயக்க அவர்கள் கலந்து கொண்டார்.
ஹோட்டல் பயிற்சிப் பாடசாலையின் வினைத்திறனை அதிகரித்து, அதிலிருந்து அதிகபட்ச உற்பத்தி திறனை இலங்கையின் இளைஞர்களுக்கு வழங்குவதற்கும், அதன் ஊடாக உள்நாட்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு ஈடுபடுத்தி இலங்கைக்கு அதிக அந்நிய செலாவணியை பெற்றுக் கொள்வதற்கு முடியுமான வகையில் தேசிய இளைஞர் படையணியின் ஹோட்டல் பயிற்சி பாடசாலையை கட்டி எழுப்புவது அனைத்து அதிகாரிகளதும் பொறுப்பாகும் என இளைஞர் படையணியின் பணிப்பாளர் இங்கு சுட்டிக்காட்டினார்.
அனைத்து துறைகளிலும் அதிக கவனத்தை செலுத்தி, மேம்படுத்த வேண்டிய துறைகளை சுட்டிக்காட்டிய பணிப்பாளர் அவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு தேசிய இளைஞர் படையணியின் மேலதிக பணிப்பாளர் (பயிற்சி மற்றும் அபிவிருத்தி), உதவி பணிப்பாளர் (பயிற்சி), மத்திய மாகாண பணிப்பாளர், ஹோட்டல் பயிற்சி பாடசாலையின் அதிபர், தலைமையக் காரியாலய அதிகாரிகள், மற்றும் பயிலுனர்களும் பங்கு பற்றினர்.