சர்வதேச இளைஞர் தினத்திற்கு இணைவாக நாடுபூராக தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன . இங்கு பாடல்களை ரசிக்கும் நிகழ்ச்சிகள், உளவளத்துணை ஆலோசனை நிகழ்சிகள், தர்ம போதனை நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள், தலைமுறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு (Inter- generational cooperation) தொடர்பான விரிவுரைகள் உள்ளிட்ட பல்வேறு விசேட நிகழ்ச்சிகள் நிலைய மட்டத்தில் நடைபெற்றது .இந்த நிகழ்ச்சிகளில் நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட ஊழியர் குழுவினர், இளைஞர் பயிலிளவல்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பங்கேற்றனர்.