தேசிய இளைஞர் படையணியால் ஏற்பாடு செய்யப்பட்ட PRO-EXPO 2025 தொழில் சந்தை 2025 மே மாதம் 09 ஆம் திகதி இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர அவர்களின் தலைமையில் வாரியப்பொல தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் இளைஞர் படையணியின் பணிப்பாளர் காமினி விக்ரமபால அவர்கள், மேலதிக பணிப்பாளர்கள் , நிலையைப் பொறுப்பதிகாரிகள் மற்றும் தலைமை அலுவலக ஆளணியினர் பங்குபற்றினர்.