தேசிய இளைஞர் படையணி youth cadet களின் மறைத்திருக்கும் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்துதல் மற்றும் சான்றிதழ் வழங்கும் வைபவம் கடந்த 19 ஆம் திகதி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க அவர்களின் தலைமையில், பத்தரமுல்ல தியத்த வளாகத்தில் நடைபெற்றது. மனித எண்ணங்கள், ஆற்றல்கள் மற்றும் நிபுணத்துவ அடிப்படையில் வர்ணங்கள், உருக்கள், கோடுகள் போன்ற வெளிப்படுத்தல் ஊடகங்கள் மூலம் வெளியிடப்படும் திறந்த கலை ஊடகமாக ஒவியம் மற்றும் ஆக்கக் கலையை குறிப்பிடலாம். அந்த எண்ணக்கருவை அடிப்படையாகக்கொண்டு தேசிய இளைஞர் படையணி 2023 பயிலுனர்கலான youth cadet களின் பயிற்சி திட்டத்தில் அடங்கியுள்ள கருத்திட்டமாக மூன்று நாட்கள் பூராக இந்த ஒவியம் மற்றும் ஆக்கக் கலை பட்டறை 150 க்கு மேற்பட்டவர்களின் பங்குபற்றுதலுடன் செயற்படுத்தப்பட்டது .
அனுபவம் வாய்ந்த ஒவியம் மற்றும் ஆக்கக் கலை ஆலோசகர் குழாம் ஒன்றின் கீழ் நிபுணத்துவ அறிவை வழங்கி, பட்டறை முடிவில் youth cadet களின் திறன்களை உபயோகப்படுத்தி கிராபிக் ஆக்கம், மாதிரி வடிவமைப்பு , போட்ரேட் ஆக்கம் , நேரடி சுற்றுச் சூழல் ஓவிய வடிவமைப்பு , பனை ஓலை சார்ந்த ஆக்கம், செயற்கை மலர் தயாரித்தல் , களி மண் நகை வடிவமைப்பு, மற்றும் சிற்ப வடிவமைப்பு போன்றன மேற்கொள்ளப் பட்டது . இங்கு விசேட திறமைகளை வெளிப்படுத்தியவர்கள்களை மதிப்பீடு செய்து சான்றிதழும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதான, தேசிய இளைஞர் படையணி தவிசாளர் நிலந்த ஏகநாயக்க, பணிப்பாளர் சுஜீவ ரத்நாயக யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ , சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர், தேசிய சிற்ப சபையின் அதிகாரிகள், வளவாளர்கள், மேலதிக பணிப்பாளர்கள், உதவிப் பணிப்பாளர்கள் , மாகாண பணிப்பாளர்கள் , நிலைய பொறுப்பதிகாரிகள் , தலைமை அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட youth cadet களும் பங்குபற்றினர்.