“ஜப்பான் கனவுக்கு சரியான பாதை” எனும் தொனிப்பொருளில், தேசிய இளைஞர் படையணியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜப்பான் நாட்டின் தொழில் வாய்ப்புகள் தொடர்பிலான தெளிவூட்டும் நிகழ்ச்சி திட்டம் ஜூன் மாதம் 14ஆம் திகதி, தம்புள்ள இனாமழுவ ஹோட்டல் பயிற்சிப் பாடசாலையில் சமன் ஹேரத் அவர்களின் ஒருங்கிணைப்பின் கீழ் குசுடா யூரி அம்மையார் ( CEO of Gaia international center co.), அகிட்டா அவர்கள் ( chairman of Japanese sushi restaurant association) , மருத்துவ கலாநிதி பிரதாந்த பெரேரா அவர்கள் உள்ளிட்ட ஜப்பான் தூதுக் குழுவினரின் தலைமையின் கீழ் இடம்பெற்றது.
குறித்த துறையின் அறிவு, தொழில் அனுபவம், திறமை மற்றும் பயிற்சி பெற்ற இளைஞர் யுவதிகளை ஜப்பான் நாட்டில் ஹோட்டல் துறையில் மற்றும் பராமரிப்பாளர் தொழில் வாய்ப்புகளுக்காக அனுப்புவது எவ்வாறு, மொழி மற்றும் அதற்காக பூர்த்தி செய்யப்பட வேண்டிய அடிப்படைத் தகமைகள் யாவை என்பது தொடர்பில் இங்கு தெளிவூட்டப்பட்டதுடன், இந்நிகழ்ச்சி திட்டத்திற்கு தேசிய இளைஞர் படையணியின் மேலதிகப் பணிப்பாளர்(பயிற்சி மற்றும் அபிவிருத்தி) , உதவிப் பணிப்பாளர் (பயிற்சி), தம்புள்ள தேசிய இளைஞர் படையணி ஹோட்டல் பயிற்சிப் பாடசாலையின் அதிபர், ஜப்பான் பிரதிநிதிகள், இளைஞர் யுதிகள் உள்ளிட்ட பிரிவினர் பங்கு பற்றினர்.