ஏப்ரல் 30 ஆம் திகதி ஜப்பான் தூதுக்குழு ஒன்று யக்களை தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தை கண்காணிப்பதற்கு வருகை தந்திருந்தது.அவர்கள் தேசிய இளைஞர் படையணி மற்றும் அதன் பணி தொடர்பில் தெளிவு பெற்றுக் கொண்டு அனைத்து பயிற்சி நடவடிக்கைகளையும் கண்காணித்தனர்.அத்துடன் ஜப்பான் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதில் ஜப்பான் மொழி பயன்பாடு, ஜப்பான் கலாச்சாரம் பற்றிய புரிந்துணர்வு மற்றும் ஜப்பானுக்கு பொருத்தமான தொழில்நுட்ப அறிவுடன் கூடியவர்களாக இருப்பதன் முக்கியத்துவம் பற்றி அவர்கள் எடுத்துக் காட்டியமை பாராட்டப்பட வேண்டியதாகும்.ஜப்பான் மொழியை இலகுவாக எந்த மொழியின் உதவியுடனும் கற்றுக் கொள்வதற்கான கணனி மென்பொருள் ஒன்றையும் அவர்கள் அறிமுகம் செய்தனர்.
இந்த விஜயம் விளையாட்டு மட்டும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சரின் முழுமையான கண்காணிப்பின் கீழ் இடம் பெற்றது.
இந்த சந்தர்ப்பத்திற்கு மேலதிக பணிப்பாளர் பயிற்சி மற்றும் அபிவிருத்தி, மேல் மாகாண பணிப்பாளர் மற்றும் உதவி பணிப்பாளர் பயிற்சி மற்றும் இராஜாங்க அமைச்சரின் பணிக்குழாம் அதிகாரிகள் சிலரும் பங்கேற்றனர்.