தேசிய இளைஞர் படையணி “செனெஹி பியஸ” வீட்டு கருத்திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாணத்தில் சேருவாவில தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட வீடு பயனாளியான கே. டப். என். வீரசிங்க அவர்களுக்கு ஒப்படைப்பது தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் பிரிகேடியர் சுஜீவ ரத்தநாயக்க USP psc IG மற்றும் கிழக்கு மாகாண பணிப்பாளரின் தலைமையின் கீழ் கடந்த மே மாதம் 26 ஆம் திகதி இடம்பெற்றது.
இளைஞர் பயிலிளவல்களின் உழைப்பு மற்றும் நிதி பங்களிப்பின் கீழ் சேரு நுவர நெலும் கம கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீடு பிரித் ஓதுதலுக்கு மத்தியில் சுப முகூர்த்தத்தில் பயனாளிக்கு வழங்கப்பட்டதுடன், இச்சந்தர்ப்பத்திற்கு சேருவாவில பயிற்சி நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நிலைய பணிக்குழாம், அதிபர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கு பெற்றனர்.