தேசிய இளைஞர் படையணி மூலம் செயற்படுத்தப்படுகின்ற “செனெஹெ பியஸ” வீட்டுக் கருத்திட்டத்தின் கீழ் 58 இளைஞர் படையணி நிலையங்கள் மூலமாக குறைந்த வருமானம் பெறும் , வீடு கனவாக காணப்படும் 58 குடும்பங்களுக்கு புதிய வீடொன்றை அமைத்துக் கொடுக்கும் சிறப்பான பணியில் அநுராதபுரம் தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தினால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு, அநுராதபுரம் மாவட்டத்தின் கிழக்கு நுவர கம்பலாத்த பிரதேச செயலக பிரிவின் வேளுவன கிராமத்தில் வசிக்கும் திருமதி தினுசா நிலந்தி வீரசின்ஹ அவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு 2022.11.09 ஆம் திகதி கோலாகலமாக நடைபெற்றது. இளைஞர் படையணி நிலையைப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பணிக் குழாம் அங்கத்தவர்களின் முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு போன்றே பிரதேசத்திலுள்ள நன்கொடையாளர்களின் உதவிகளை கொண்டு இந்நடவடிக்கையை பூர்த்தி செய்ய முடிந்தது.
இந்நிகழ்வுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் மருத்துவ கலாநிதி அமல் ஹர்ஷ டி சில்வா அவர்கள், தேசிய இளைஞர் படையணியின் தவிசாளர் அவர்கள் மற்றும் வட மத்திய மாகாண பணிப்பாளர் , பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் , அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் வட மத்திய மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பயிற்சி நிலையங்களின் நிலையைப் பொறுப்பதிகாரிகள் பலரும் பங்குபற்றினர்.