தேசிய இளைஞர் படையணி “செனெஹி பியஸ ” வீட்டு கருத்திட்டத்தின் கீழ் தெஹியத்தகண்டிய தேசிய இளைஞர் படையணி மூலம் நிர்மாணித்து பூர்த்தி செய்யப்பட்ட வீட்டை 2023.02.16 ஆம் திகதி தேசிய இளைஞர் படையணியின் தவிசாளரின் தலைமையின் கீழ் குறித்த பயனாளி குடும்பத்திற்கு தெஹியத்தகண்டிய விஜயபுர கிராமத்தில் வழங்கப்பட்டது . இந்நிகழ்வில் மேலதிக பணிப்பாளர் (நிர்வாகம் மற்றும் நிதி ), கிழக்கு மாகாணப் பணிப்பாளர், தெஹியத்தகண்டிய பிரதேச செயலாளர் உள்ளிட்ட பிரதேசத்தின் அரச நிறுவன பிரதானிகள் பலரும் கலந்துகொண்டனர். இந்த விடயத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கு நிலையைப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பணிக் குழாமினர் , இளைஞர் பயிலிளவல்கள் மற்றும் பிரதேசத்தில் வாழும் நன்கொடையாளர்களின் ஒத்துழைப்பும் கிடைத்தது .