கண்டி – தெநுவர வலயத்தின் அனைத்துப் பாடசாலைகளையும் உள்ளடக்கும் வகையில் அதிபர்கள் , தொழிநுட்ப பாடத்திற்கு பொறுப்பான ஆசிரியர்கள் , உளவளத்துணைக்கு பொறுப்பான ஆசிரியர்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு தொழிற்கல்வி தொடர்பில் தெளிவூட்டும் நிகழ்சித்திட்டமொன்று 2023 மே மாதம் 19 ஆம் திகதி , கோர்ப் குழுத் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார அவர்களின் தலைமையில் தீரானந்த தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
பாடசாலையை விட்டு விலகும் மாணவ மாணவிகளை தொழில் வாய்ப்புக்கு ஈடுபடுத்துவது எவ்வாறு , அதற்கு எவ்வாறான வேலைத்திட்டமொன்றை பின்பற்ற வேண்டும் என்பது தொடர்பில் தெளிவூட்டுவது தேசிய இளைஞர் படையணி மூலம் மேற்கொள்ளப்பட்டதுடன் , இந்த பயிற்சி பட்டறைக்கு தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் பிரிகேடியர் சுஜீவ ரத்நாயக , தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தவிசாளர் , தொழில் பயிற்சி அதிகார சபையின் தவிசாளர் , தேசிய இளைஞர் படையணியின் மேலதிக பணிப்பாளர் (பயிற்சி மற்றும் அபிவிருத்தி ), உதவிப் பணிப்பாளர் பயிற்சி , மத்திய மாகாண பணிப்பாளர் உள்ளிட்ட பிரிவினர் பங்குபற்றினர்.