2002 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய இளைஞர் படையணியின் முதலாவது ரேஞ்சர் தலைவர்களாக பயிற்சி பெற்று இளைஞர் படையணியிலேயே பத்து வருடங்களுக்கு அண்மித்த காலம் ஒழுக்கம் மற்றும் அணிநடை ஆலோசகர்களாக கடமையாற்றிய அதிகாரிகளுக்கு வாழ்க்கை திறன் ஆலோசகர் நியமனம் வழங்குதல் ஜூலை மாதம் 25 ஆம் திகதி, தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் பிரிகேடியர் சுஜீவ ரத்தநாயக்க அவர்களின் தலைமையின் கீழ், இளைஞர் படையணி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
2015 ஆம் ஆண்டின் பின்னர் அதிக பயிலுனர்கள் இம்முறை வாழ்க்கை திறன் பயிற்சிப் பாடநெறியை பயில்வதற்காக ஒன்றிணைந்துள்ள சந்தர்ப்பத்தில் நிலையங்களில் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்த ஆலோசகர்கள் ஈடுபடுத்தப்படுவர். இந்த நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்விற்கு தேசிய இளைஞர் படையணியின் மேலதிக பணிப்பாளர்கள், உதவிப் பணிப்பாளர்கள், தலைமையக அதிகாரிகள் மற்றும் புதிதாக நியமனம் பெற்றவர்களும் பங்கு பற்றினர்.