இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்கள் இன்று தேசிய இளைஞர் படையணியின் தவிசாளர் மற்றும் ஊழியர் குழாமிற்கு மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் மற்றும் ஊழியர் குழாமிற்கு 2022 ஆம் ஆண்டு புதுவருடத்தின் எதிர்கால நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமைய நல்லாசிகளை தெரிவித்தார்.அது இன்று தேசிய இளைஞர் படையணியின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற புதுவருட எதிர்கால நடவடிக்கைகள் சம்பந்தமான விசேட கூட்டத்தில் ஆகும்.
அதேபோன்று புத்தாண்டில் பல மாற்றங்களை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அந்த மாற்றங்களுள் விசேடமானதாக digitalization என்று அழைக்கப்படும் டிஜிட்டல் மயமாக்கும் கருத்திட்டம் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் 50 % அளவில் காகித பயன்பாட்டை குறைப்பதன் மூலம் அரச செலவினத்தை குறைத்து வினைத்திறனை அதிகரிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
தேசிய அடையாள அட்டையை டிஜிட்டல் மயமாக்கும் புதிய பயணத்திற்கு பங்களிப்பை வழங்கி தேசிய இளைஞர் படையணி பயிலுனர்களுக்கு மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகம் செய்வதற்கு மற்றும் அதனை தடுப்பூசி ஏற்றல் டிஜிட்டல் கார்ட்டுடன் ஒருங்கிணைப்பு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் மூலம் மேற்கொள்வதற்கு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். Digital platform ஊடாக கொடுக்கல் வாங்கல் செய்யும் தேவையை மற்றும் இளைஞர் யுவதிகளை தொழிலுக்கு அனுப்புதல், தொழில் சந்தைக்கு அனுப்புதல் மற்றும் அவர்களின் ஆளுமை மற்றும் தலைமைத்துவத்தை கட்டியெழுப்பும் செயற்பாட்டிற்கு முதல் இடத்தை வழங்கி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்விற்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அனுராத விஜேகோன் அவர்கள் , அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் வடுகே அவர்கள், தேசிய இளைஞர் படையணியின் தவிசாளர் கர்னல் தர்ஷன ரத்னாயக்க அவர்கள், சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் சுதீர ஜயரத்ன அவர்கள் உள்ளிட்ட தேசிய இளைஞர் படையணியின் தலைமை காரியாலய ஊழியர் குழாம் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஊழியர் குழாமின் அங்கத்தவர்களும் பங்கேற்றனர்.