தேசிய இளைஞர் படையணி வாழ்க்கைத் திறன் பாடத்திட்டத்தை கற்பிப்பதற்கு ஆர்வம் காட்டும் அணிநடை மற்றும் ஒழுக்க ஆலோசகர்களுக்காக நடத்தப்படும் 10 நாள் செயலமர்வின் முதலாம் கட்டம் ஜூன் மாதம் 5 ஆம் திகதி, நாவுல வெளிக்களப் பயிற்சி நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டது
செயலமர்வின் ஆரம்ப விரிவுரையை தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் பிரிகேடியர் சுஜீவ ரத்நாயக்க அவர்கள் மேற்கொண்டதுடன், அங்கு” தேசிய இளைஞர் படையணி ஒரு திசையை நோக்கி பயணிப்பதாயின் அனைத்து ஆலோசகர்களும் ஒரே பாதையில் பயணிக்க வேண்டும் என்பதாகவும், அணிநடை மற்றும் ஒழுக்க ஆலோசகர்கள் தமது உத்தியோகபூர்வ பணிகளுக்கு மேலதிகமாக வாழ்க்கை திறனை கற்பிப்பது மேலதிக பொறுப்பாக கொண்டு செயற்படுவதன் மூலம் இளைஞர் படையணி முன்னேற்றத்துக்கு பங்களிப்பு செய்யுமாறும் ” பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.