தேசிய இளைஞர் படையணியின் இளைஞர் கடெட்களின் ஓவிய மற்றும் ஆக்கத்திறன்களை மேம்படுத்துதல் மற்றும் வெற்றிகரமான தொழில் முனைவோரை உருவாக்கும் நோக்கத்தில் நடத்தப்பட்ட” Y- Art ” நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 28,29 மற்றும் 30 ஆகிய மூன்று தினங்கள் பூராகவும் பத்தரமுல்லை தியத உயன வளாகத்தில் வெற்றிகரமாக இடம்பெற்றது.
நாடு பூராக அமைந்துள்ள இளைஞர் படையணி நிலையங்கள் அனைத்தையும் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் ஓவியம் மற்றும் ஆக்கங்களுக்கு ஆர்வம் மற்றும் விருப்பம் காட்டும் இளைஞர் கடெட்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.
உயிரோட்டமுள்ள சூழல் சித்திரங்கள், துணி வடிவமைப்புக்கள், பீரளு ரேன்தை பின்னல் ஆக்கங்கள், potrait ஓவியம் , பிரம்பு ஆக்கங்கள் , பனை ஓலை ஆக்கங்கள் , செயற்கைப் பூக்கள் தயாரித்தல் , தோல் பொருள் தயாரித்தல், களிமண் ஆக்கங்கள் போன்ற துறைகளில் நடத்தப்பட்ட இந்நிகழ்வுக்கு தேசிய அருங்கலைகள் பேரவையின் நிபுணத்துவம் மிக்க ஆலோசகர் சபை வளவாளர் பங்களிப்பை வழங்கினர்.
இந்நிகழ்வின் நிறைவு விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் வைபவம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் மகளிர் ,சிறுவர்கள், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் சுதீர ஜயரத்ன அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இங்கு பங்கு பற்றிய அனைத்து இளைஞர் கடெட்களும் பாராட்டப்பட்டார்கள் . நிகழ்வில் தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் பிரிகேடியர் சுஜிவ ரத்னநாயக்க யுஎஸ்பி பிஎஸ்சி ஐஜி ,மேலதிக பணிப்பாளர்கள் ,உதவி பணிப்பாளர்கள், மாகாண பணிப்பாளர்கள், அரச நிறுவன பிரதானிகள், தலைமை அலுவலக அதிகாரிகள் ,நிலையப் பொறுப்பதிகாரிகள் ஆலோசகர்கள் மற்றும் இளைஞர் கடெட்கள் பங்கு பற்றினர்.