Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

தேசிய இளைஞர் படையணி வாழ்க்கைத் திறன் பாடநெறியின் முதலாம் அணியின் கலைந்து செல்லும் நிகழ்வு.

தேசிய இளைஞர் படையணியை புதிய பாதையில் கொண்டு செல்லும் பணிப்பாளர் பிரிகேடியர் சுஜீவ ரத்நாயக்க யூஎஸ்பி பிஎஸ்சி ஐஜி அவர்களின் எண்ணக் கருவுக்கு ஏற்ப 6 மாத கால வாழ்க்கைத் திறன் பாடநெறியை வெற்றிகரமாக முடித்த 2024 முதலாம் அணியின் இளைஞர் கடெட்களின் கலைந்து செல்லும் அணிவகுப்பு ஆகஸ்ட் 07 ஆம் திகதி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கே.மகேசன் அவர்களின் தலைமையின் கீழ் கம்பஹா மாவட்ட விளையாட்டரங்கில் மிகவும் கோலாகலமான முறையில் இடம்பெற்றது.

தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் நிறுவனத்தின் அபிவிருத்தி போன்றே தேசிய இளைஞர் படையணியின் இளைஞர் கடெட்களின் முன்னேற்றத்திற்கும் புதிய பாதைகளை திறந்து கொடுத்து இந்த அபிமானமிக்க விழாவை தமது பூரண வழிகாட்டுதலின் கீழ் வழி நடத்தினார்.

மேல் மாகாண பணிப்பாளர் கர்ணல் பாலித்த மெண்டிஸ் அவர்களின் கண்காணிப்பின் கீழ் அத்தனகல்லை, புளத்சின்ஹல, யக்கலை, திவுலப்பிட்டிய, கட்டுநாயக்க மற்றும் ராஜகிரிய ஆகிய பயிற்சி நிலையங்களின் இளைஞர் கடெட்கள் இங்கு கலைந்து சென்றனர்.

யக்கலை அழகியல்கலை பாடசாலையின் நடனம், அழைக்கப்பட்ட பாடசாலை பேண்ட் வாத்திய குழுக்களின் கண்காட்சி, தேசிய இளைஞர் படையணி அணிநடை கண்காட்சி மற்றும் தேசிய இளைஞர் படையணி பேண்ட் வாத்திய குழுவின் கண்காட்சி இந்த விழாவை மிகவும் வர்ணமயமாக்கியதுடன் இந்த விழாவிற்காக தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் சுஜீவ ரத்நாயக்க யூஎஸ்பி பிஎஸ்சி ஐஜி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அதிகாரிகள், தேசிய இளைஞர் படையணியின் மேலதிக பணிப்பாளர் (நிர்வாகம் மற்றும் நிதி) சட்டத்தரணி நிஷாந்த புஷ்பகுமார அவர்கள், மேலதிக பணிப்பாளர் (பயிற்சி மற்றும் அபிவிருத்தி) சமன் குலசூரிய அவர்கள், உதவிப் பணிப்பாளர்கள், மேல் மாகாண பணிப்பாளர் கர்ணல் பாலித்த மெண்டிஸ் அவர்கள் உள்ளிட்ட மாகாண பணிப்பாளர்கள், தலைமை அலுவலக அதிகாரிகள், நிலைய பொறுப்பதிகாரிகள், பிரதேச அரசு உத்தியோகத்தர்கள் ,பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், நிலைய அதிகாரிகள் , பாடசாலை மாணவர்கள், இளைஞர் கடெட்கள் , பெற்றோர்கள் உள்ளிட்டவர்கள் பங்கு பற்றினர்.
மேல் மாகாணத்தின் அனைத்து நிலையங்களையும் சேர்ந்த சிறந்த இளைஞர் கடெட் (ஆண்/ பெண்) ஆகியோருக்கான சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் இந்த சந்தர்ப்பத்தில் வழங்கப்பட்டது

*கட்டுநாயக்க பயிற்சி நிலையம்
டப்.சி.சி. விதானகமகே
டப்.ஏ.என்.ஆர்.டப். ஆரச்சி

* அத்தனகல்லை பயிற்சி நிலையம்
பி.ஆர்.ஓ.ஏ. சந்தீபனி
டப்.ஏ.எல்.டி. வீரசிங்க

*திவுலப்பிட்டிய பயிற்சி நிலையம்
ஜே.ஏ.நிசோதா நிம்னாதி
கே.ஏ.சனுஜ மதுரங்க

* புளத்சின்ஹல, பயிற்சி நிலையம்
எம்.கே.காவியா துலாஞ்சனி
பி .வி பசிது சாமர

*யக்களை பயிற்சி நிலையம்
என்.கே.என். கவீஷா
டி.கே.கே.பெரேரா

*ராஜகிரிய பயிற்சி நிலையம்
கே.பி.வை.எச். பதிரகே
டி.ஆர்.எஸ். ராஜ்

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button