Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

CICA மாநாட்டுக்கு தேசிய இளைஞர் படையணியின் அப்ராவும் இணைந்தார் ..

CICA (Conference on Interaction and Confidence Building Measures in Asia) மாநாட்டின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட CICA இளைஞர் கவுன்சில் 2024 அக்டோபர் மாதம் 3 மற்றும் 4 ஆகிய தினங்களில், கசகஸ்தானில் இடம்பெற்றது.

அந்த மாநாட்டில் தேசிய இளைஞர் படையணியை பிரதிநிதித்துவப்படுத்தி வெண்ணப்புவ பயிற்சி நிலையத்தின் முகமது அப்ரா இளைஞர் கடெட் பங்குபற்றினார்.

இந்த மாநாட்டில் தன்னார்வ சேவையின் முக்கியத்துவம் மற்றும் ஆசியாவின் நிலைபேறான அபிவிருத்தியை மேம்படுத்துவதில் தன்னார்வ சேவையின் பங்கு பற்றி விவாதிக்கப்பட்டது.

அப்ரா, இந்த மாநாட்டில் கலந்து கொண்டு, இது அவரது வாழ்க்கையின் மறக்க முடியாத தருணமாகும் எனவும், பல்வேறு நாடுகளில் இருந்து வந்த பலருடன் சந்தித்து கிடைத்த அனுபவங்கள் மற்றும் அறிவு மிக முக்கியமானதாக உள்ளது எனக் கூறினார்.

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button